| வீசா அனுமதிப் பத்திர சேவை |
|
கடமை நேரங்கள் யாவை?
இலங்கை வீசா அனுமதிப் பத்திரம் என்றால் என்ன? இலங்கை வீசா அனுமதிப் பத்திரம் என்பது இலங்கையர் அல்லாதோருக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க வசதியளிக்கவும், அவர்கள் தங்கி இருக்கும் காலப் பகுதியை மட்டுப்படுத்தவும், அவ்வாறு தங்கி இருப்பதற்கான நிபந்தனைகளை அறிவிக்கவும், வெளிநாட்டுக் கடவுச்சீட்டிலோ அதனையொத்த ஆவணத்திலோ இருக்கின்ற புறக்குறிப்பாகும். இலங்கைக்குள் பிரவேசிக்கவும் அத்துடன் / அல்லது அங்கு தங்கி இருக்கவும் அனுமதி வழங்கும் நான்கு வகையான வீசாக்கள் உள்ளன. வருகைதரல் வீசா வருகைதரல் வீசா என்பது வெளிநாட்டவரொருவருக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க இலங்கை அரசாங்கத்தின் விருப்பத்தை தெரிவிக்கின்ற அனுமதிப் பத்திரம் ஆகும். இந்த வீசா அனுமதிப் பத்திரத்தில் நாட்டுக்குள் தங்கியிருக்கக்கூடிய காலப் பகுதியும் நிபந்தனைகளும் அடங்கி இருக்கும். சுற்றுலா வருகைதரல் வீசா அனுமதிப் பத்திரம் கண்கவர் இடங்களைப் பார்வையிடல், உல்லாசப் பயணங்கள், ஓய்வு நேரத்தைச் சுகமாகக் கழித்தல், உறவினர்களைச் சந்தித்தல் அல்லது யோகா பயிற்சி போன்றவற்றுக்காக குறுகிய காலப்பகுதிக்குள் இலங்கையில் தங்கியிருக்க கருதுகின்ற நல்லெண்ணம் பொருந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலா வருகைதரல் வீசா அனுமதிப் பத்திரம் விநியோகிக்கப்படும். வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் என்பது விசேட கருமங்களுக்காக வதிவிட வசதிகளைப் பெற்றுக்கொள்ள விரும்புகின்ற இலங்கையரல்லாத ஆட்களுக்கு விநியோகிக்கப்படுகின்ற அனுமதிப் பத்திரமாகும். வதியும் வீசா அனுமதிப் பத்திர வகையில் எட்டு உப வகைகள் உள்ளன. நான் எத்தகைய வதிவிட வீசா வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்திற்கு தகைமையுடயவன்? 1. தொழில்வாய்ப்பு வகையினம்
2. முதலீட்டு வகையினம்
3. சமயம்சார் வகையினம்
4. மாணவர் வகையினம்
5. 1954 இந்திய - இலங்கை உடன்படிக்கையில் அடங்கும் பதிவு செய்த இந்தியர்கள் 6. முன்னாள் இலங்கையர்களும் அவர்களில் தங்கிவாழ்வோரும் 7. இலங்கையரொருவரின் குடும்ப அங்கத்தவர்கள்
8. ராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ வீசா அனுமதிப் பத்திரங்கள் "எனது கனவு இல்லம்" வீசா அனுமதிப்பத்திர நிகழ்ச்சித்திட்டம் வதியும் விருந்தினர் வீசா அனுமதிப் பத்திர நிகழ்ச்சித்திட்டம்
இடைத்தங்கல் வீசா என்பது வெளிநாட்டவரொருவர் பிறிதொரு பயண முடிவிடத்தை நோக்கிச் செல்கின்ற வேளையில் தற்காலிகமாக தங்கிச் செல்லும் பொருட்டு இலங்கையில் பிரவேசிக்க அவருக்கு வாய்ப்பு வழங்கும் அனுமதிப் பத்திரமாகும். கைமாறு கருதாத வீசா (Gratis Visa) ராஜதந்திர அல்லது உத்தியோகபூர்வ புறக்குறிப்பினைக் கொண்ட கடவுச்சீட்டினைக் கொண்டுள்ள ஒருவருக்கு வீசா அனுமதி பெற எவ்விதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. வீசா கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுவோர் யாவர்?
மேற்படி தொடர்களுக்காக ஒவ்வொரு வகையினத்திற்காகவும் தயவு செய்து இங்கே சுடக்குக. இலங்கை வீசா அனுமதிப் பத்திரத்திற்கான பொதுவான தகைமைகள் யாவை? இலங்கை குடிவரவு - குடியகல்வு அதிகாரிகள் கீழே குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் உங்களுக்கு வீசா அனுமதிப்பத்திரத்தை விநியோகிப்பர்.
வருகைதரல் வீசா அனுமதிப் பத்திரமொன்றின் பொதுவான நிபந்தனைகள் யாவை?
|
| கடவுச்சீட்டு பற்றிய பொதுவான தகவல்கள் |
|
2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது டிஜிட்டல் புகைப்படத்தையும் விரலடையாளத்தையும் திணைக்களத்திற்கு சமர்ப்பித்தல் வேண்டும். டிஜிட்டல் பகைப்படமானது நாடு பூராகவும் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையங்களினூடாக அல்லது குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை காரியாலயத்தில் அல்லது குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய காரியாலயங்களில் அமைந்துள்ள புகைப்பட நிலையங்களினூடாக சமாப்பிக்கப்படலாம். அச்சிடப்பட்ட புகைப்படப் பிரதிகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விரலடையாளங்கள் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை காரியாலயம் அல்லது பிராந்திய காரியாலயங்களில் சேகரிக்கப்படுவதுடன் இதற்காக விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட ரீதியில் திணைக்களத்திற்கு சமூகமளித்தல் வேண்டும்.
டிஜிட்டல் புகைப்படம் எவ்வாறு திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படலாம்?
மேலதிக தகவல்கள்: துரித இலக்கம் 1962 அல்லது தொலைபேசி இலக்கங்கள் 0115329200 / 0115329175 இலங்கைச் கடவுச்சீட்டொன்றைப் பெற எனக்கு உரிமை உண்டா?
கடவுச்சீட்டிற்காக விண்ணப்பிப்பது எப்படி? பத்தரமுல்லை, “சுகுறுபாயா” கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கடவுச்சீட்டுப் பிரிவிடம் (01 ஆம் மாடி – சாதாரண சேவை/ 02 ஆம் மாடி – அவசர சேவை) கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஒப்படைக்கலாம். இங்கு இடஅமைவுப் படத்தைப் பார்க்க ஏற்புடைய பொத்தானை அழுத்துக.கடவுச்சீட்டு வகைகள் யாவை?
|
| கடவுச்சீட்டினை விநியோகித்தல் |
* M அல்லது N பிரிவைச் சேந்த கடவுச்சீட்டொன்று ஏற்கெனவே உங்களிடம் இருப்பின் (கடவுச்சீட்டின் இலக்கம் M அல்லது N பிரிவின் எழுத்துடன் தொடங்குமாயின்) விண்ணப்பப் பத்திரத்துடன் அதனைச் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் பத்திரம் ஒப்படைக்கப்பட வேண்டிய இடம் யாது?
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரங்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் யாவை?
* M அல்லது N பிரிவைச் சேந்த கடவுச்சீட்டொன்று ஏற்கெனவே உங்களிடம் இருப்பின் (கடவுச்சீட்டின் இலக்கம் M அல்லது N பிரிவின் எழுத்துடன் தொடங்குமாயின்) விண்ணப்பப் பத்திரத்துடன் அதனைச் சமர்ப்பிக்க வேண்டும். இராஜதந்திர கடவுச்சீட்டுக்கான தயாரிப்புக் கட்டணம் யாது? சாதாரண அடிப்படையில் - இலங்கை ரூபா. 3500.00 அவசர அடிப்படையில் - இலங்கை ரூபா. 15000.00
விண்ணப்பப் பத்திரத்தை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்?
விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் யாவை?
* M அல்லது N பிரிவைச் சேந்த கடவுச்சீட்டொன்றை ஏற்கெனவே நீங்கள் வைத்திருந்தால் (கடவுச்சீட்டின் இலக்கம் M அல்லது N பிரிவின் எழுத்துடன் ஆரம்பிக்குமாயின்) விண்ணப்பப் பத்திரத்துடன் அதனைச் சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரத்தை எங்கு சமர்ப்பிக்க வேண்டும்? கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு. உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்கான தயாரித்தல் கட்டணம் யாது?
என்னிடம் பிறப்புச் சான்றிதழோ தேசிய அடையாள அட்டையோ இல்லாவிட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?
* ஏற்கெனவே உங்களிடம் M அல்லது N பிரிவைச் சேந்த செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது அவசர சான்றிதழ் இருப்பின் (கடவுச்சீட்டின் இலக்கம் M அல்லது N அல்லது EC எழுத்துக்களில் தொடங்குமாயின்) விண்ணப்பப் பத்திரத்துடன் அதனை இணைத்தல் வேண்டும்.விண்ணப்பப் பத்திரத்தை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்?
பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரத்தை எங்கு சமர்ப்பிக்க வேண்டும்?
அவசர சான்றிதழை வழங்க எவ்வளவு காலம் செல்லும்? அவசர சான்றிதழுக்கான தயாரித்தல் கட்டணம் யாது?
எப்போது விண்ணப்பிக்கலாம்?
விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு சமர்ப்பிப்பது?
மகவேற்புப் பிள்ளைக்காக கடவுச்சீட்டினைப் பெற விண்ணப்பிப்பதாயின் கீழ்க்காணும் மேலதிக ஆவணங்கள் அவசியமாகும்.
முக்கிய குறிப்பு: ஆவணங்களின் நிலற் பிரதிகள் சகிதம் மூலப் பிரதிகளைச் சமர்ப்பித்தல் வேண்டும். கீழ்க் காட்டப்பட்ட முக்கிய சந்தர்ப்பங்களில் கீழ்க் காட்டப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்தல் வேண்டும்.பிள்ளை/ பிள்ளைகள் இலங்கைக்கு வெளியே பிறந்திருப்பின், அந்தந்த பிள்ளைக்காக கொன்சியுலர் அலுவலகத்தினால் விநியோகிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழும், குடியுரிமையைப் பதிவு செய்த சான்றிதழும்.விண்ணப்பதாரியின் (பிள்ளையின்) பெற்றோர் செல்லுபடியான இலங்கைக் கடவுச்சீட்டை/ கடவுச்சீட்டுகளைக் கொண்டில்லையெனில், அதனை உறுதிப்படுத்துவதற்கான சத்தியக் கடதாசியும், பெற்றோரின் தேசிய அடையாள அட்டையும். அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டினை தயாரிப்பதற்கான கட்டணம் யாது (16 வயதிற்கு கீழ்)? கடவுச்சீட்டில் பிள்ளைகளைச் சேர்த்தல்
பிள்ளைகள் என்றால் யார் ? 16 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் பிள்ளைகள் எனக் கருதப்படும். பெற்றோரின் கடவுச்சீட்டில் பிள்ளைகளின் பெயரை சேர்க்க முடியுமா ? முடியாது. பிள்ளைகளுக்காக தனியான கடவுச்சீடுகளை பெற்றுக் கொள்ள வேன்டும்.
கடவுச்சீட்டு காணாமல் போயிருக்கும் சந்தர்ப்பத்தில் கீழ்க் காட்டப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்தல் வேண்டும்.
குடியுரிமை பெற்றுக் கொள்ளப்பட்ட மற்றைய நாட்டின் கடவுச்சீட்டும், இலங்கைக் கடவுச்சீட்டொன்று இருப்பின் அக் கடவுச்சீட்டும் (வாழ்க்கைத் தரவு விபரங்கள் அடங்கிய பக்கங்களின் நிழற் பிரதிகளுடன்) |
| வெளிநாட்டு விண்ணப்பப் பத்திரங்கள் |
|
வெளிநாட்டுத் தூதரகக் கிளை வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கான அறிவுறுத்தல்கள் இலங்கைப் பிரசாவுரிமையை கொண்டுள்ள ஒருவர் வெளிநாடொன்றில் இருக்கும் போது புதிய கடவுச்சீட்டொன்றினைப் பெறவோ / கடவுச்சீட்டினைப் புதுப்பித்துக்கொள்ளவோ அந்நாட்டின் தூதகரத்தினூடாக அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் இலங்கைத் தூதரகமொன்று இல்லாவிடின் மிகவும் அருகில் உள்ள நாட்டில் அமைந்துல்ல இலங்கைத் தூதரகத்தினூடாகவேனும் விண்ணப்பிக்கலாம். குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத் தலைமையகத்தின் வெளிநாட்டுத் தூதரக கிளையினால் இவ்விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும். வெளிநாட்டுத் தூதரகங்கள் ஊடாக கடவுச்சீட்டுகளுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளுக்கான அறிவுறுத்தல்கள் 1. இலங்கை வெளிநாட்டுத் தூதரங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்: (அ) மிகச் சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட கடவுச்சீட்டு விண்ணப்பப்படிவத்தை (படிவம் K 35 A), மற்றைய அத்தாட்சிப்படுத்துவதற்குத் தேவையான ஆவணங்களுடன் இலங்கை வெளி நாட்டுத் தூதரகத்தில்/ கொன்சியுலர் காரியாலயத்தில் ஒப்படைத்தல் வேண்டும். (ஆ) விண்ணப்பதாரியின் பிரகடனம் உள்ளடக்கப்பட்டு கடவுச்சீட்டு விண்ணப்பப்படிவம் (படிவம் K 35 A) திருத்தப்பட்டிருப்பதுடன், இவ் விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து, விண்ணப்பதாரி கையொப்பமிட்டு தூதரக உத்தியோகத்தரிடம் ஒப்படைத்தல் வேண்டும். விண்ணப்பதாரியின் பிரகடனம் அடங்கிய பகுதியில் விண்ணப்பதாரியின் கையொப்பம் இன்றி எந்தவொரு விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. (இ) கடைப்பிடிக்க வேண்டிய/ கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்களைத் தெளிவூட்டும் விசேட அறிவுறுத்தல் குறிப்பை, கடவுச்சீட்டு விண்ணப்பப்படிவத்தை விநியோகிக்கும் போதே ஒவ்வொரு விண்ணப்பதாரிக்கும் விநியோகித்தல் வேண்டும். (ஈ) அச்சிடப்பட்ட கடவுச்சீட்டு விண்ணப்பப்படிவங்களை (படிவம் K 35 A), அந்தந்த வெளிநாட்டுத் தூதரகங்கள்/ கொன்சியுலர் காரியாலயங்கள் ஊடாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், இத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, தொடரறா முறை மூலமாகவும் இவ் விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2. 2018.01.01 ஆம் திகதி தொடக்கம், வெளிநாட்டுத் தூதரங்களூடாக விண்ணப்பித்து புதிய கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொண்ட விண்ணப்பதாரிகள், விமான நிலையங்களூடாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்: (அ) பயணிகள் குடிவரவு கருமபீடத்திற்கு அறிவிப்புச் செய்தல் வேண்டும். அல்லது பிரதான குடிவரவு உத்தியோகத்தரிடம் அவர்கள் நேரடியாக அறிவிப்புச் செய்தல் வேண்டும். (ஆ) இதன் போது தனியான குறிப்பிலக்கமொன்றுடன் கூடியதாக, உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் படிவமொன்று (BDA Form) இரண்டு பிரதிகளைக் கொண்டதாக பயணிகளுக்கு விநியோகிக்கப்படும். (இ) விமானப் பயணிகள், உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் படிவத்தில் (BDA Form) இரு பிரதிகளைக் கொண்டதாக கையொப்பமிடுதல் வேண்டும். (ஈ) அவற்றுள் ஒன்று, குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தில் உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் சமர்ப்பிப்பதற்காக அந் நபருக்கு விநியோகிக்கப்படும். (உ) மற்றைய பிரதி விமான நிலையத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கப்படும். விமான நிலையத்தில் உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான வசதிகள் காணப்படுவதில்லை என்பதால், அவர்கள் உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திற்கு வருகை தருதல் வேண்டும். உயிர்மானத் தரவுகளைப் (கைவிரல் அடையாளம்) பெற்றுக் கொடுப்பதற்காக திகதியொன்றையும், நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ளலாம். இங்கே கிளிக் செய்யவும் 3. இலங்கைக்குள் பிரவேசித்ததன் பின்னர் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு அல்லது திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களுள் ஒன்றிற்கு வருகை தந்து கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்: 2018 சனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வருமாறு, இலங்கை வெளிநாட்டுத் தூதரகங்கள் ஊடாக கடவுச்சீட்டிற்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் தொடர்பில், இலங்கை வெளிநாட்டுத் தூதரகங்கள் ஊடாக இலங்கைக் கடவுச்சீட்டிற்காக விண்ணப்பித்து, தமக்குரிய கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்டதன் பின், அவர்கள் இலங்கைக்கு வருகை தரும் முதற் சந்தர்ப்பத்திலேயே அவர்களது உயிர்மானத் தரவுகள் (கைவிரல் அடையாளம்) பெற்றுக் கொள்ளப்படும். (அ) உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக, பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு அல்லது மாத்தறை, கண்டி, வவுனியா, குருணாகல் ஆகிய இடங்களில் அமைந்துள்ள திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களுள் ஒன்றிற்கு வருகை தருதல் வேண்டும். (ஆ) இவ் அலுவலகங்ளில் வெளிநாட்டுத் தூதரகக் கிளையில் நிறுவப்பட்டுள்ள விசேட கருமபீடத்தில் கைவிரல் அடையாளம் பெற்றுக் கொள்ளப்படும். (இ) உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொடுத்ததன் பின் உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறை பூர்த்தியடைந்ததை அத்தாட்சிப்படுத்தும் வகையில் தன்னியக்கமாக பிறப்பிக்கப்படுகின்ற (System generated) பற்றுச்சீட்டொன்று திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும். (ஈ) உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை மேற்கொண்டு முடிப்பதற்காக செலவாகும் காலம் சுமார் 30 - 45 நிமிடங்களாகும். (உ) உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொடுத்த நபர்களுக்கு எந் நேரத்திலும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு ஏதுவாக எல்லைக் கட்டுப்பாட்டு முறைமை இற்றைப்படுத்தப்படும். (ஊ) மேற்சொன்ன பற்றுச்சீட்டை, இலங்கையிலிருந்து புறப்படும் வரை பாதுகாப்பாக தம்வசம் வைத்திருத்தல் வேண்டும். கடவுச்சீட்டு விண்ணப்ப படிவம் K 35 A ஐ தரவிறக்க விசாரணைகள் பிரதிக் கட்டுப்பாட்டாளர் - திருமதி கே.ஜீ.ஆர். பிரியதர்ஷனீ தொலைபேசி : +94 11 5329230 நீடிப்பு : 9230 பக்ஸ் : +94 11 2879213 மின்னஞ்சல் : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. வெளிநாட்டுத் தூதரகப் பிரிவுக் கிளையினூடாக விண்ணப்பிக்கும் விதம்: அவசியமான ஆவணங்கள்: கடவுச்சீட்டு விநியோகத்தைப் பார்க்கவும். விண்ணப்பப் பத்திரங்களுடன் தொடர்புடைய கட்டணங்கள் வெளிநாட்டுத் தூதரகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. பின்வரும் சுற்றறிக்கைகளைப் பார்க்கவும், உதவிச் சேவைகள்
அத்தாட்சிப்படுத்தல் சேவைகள் கடவுச்சீட்டின் பிரதான தரவுப் பக்கத்தின் பிரதியொன்றை அத்தாட்சிப்படுத்திக் கொள்வதெப்படி? குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் வெளிநாட்டுத் தூதரகப் பிரிவினால் அத்தாட்சிப்படுத்தல் சேவைகள் வழங்கப்படுகின்றன. இச்சேவையைப் பெற்றுக்கொள்ள அவசியமான ஆவணங்கள் யாவை? மூலக் கடவுச்சீட்டும் அத்தாட்சிப்படுத்த அவசியமான பிரதிகளும் இச்சேவையுடன் தொடர்புடைய கட்டணங்கள் யாவை? பிரதி ஒன்றுக்கு இலங்கை ரூபா 300/- (அத்தாட்சிப்படுத்தக்கூடிய உச்சப் பிரதிகளின் எண்ணிக்கை 3)
மொழிபெயர்ப்புச் சேவை கடவுச்சீட்டின் பிரதான தரவுகள் பக்கத்தினதும் சம்பந்தப்பட்ட புறக்குறிப்புக்களினதும் அராபிய மொழிபெயர்ப்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் வெளிநாட்டுத் தூதரகக் கிளையூடாக வழங்கப்படும். எனது கடவுச்சீட்டின் மொழிபெயர்ப்பினை பெற்றுக்கொள்வதற்கான நடைமுறை யாது? விண்ணப்பதாரி தனது கடவுச்சீட்டுடன் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு நேரில் வருகைதரல் வேண்டும். இச்சேவையுடன் தொடர்புடைய கட்டணம் யாது? ஒரு கடவுச்சீட்டின் மொழிபெயர்ப்புக்காக இலங்கை ரூபா 1,200/- அறவிடப்படும். |
| கடவுச்சீட்டினைப் புதுப்பித்தல், காலத்தை நீடித்தல் அல்லது திருத்தம் செய்தல் |
|
இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவரொருவர் தனது கடவுச்சீட்டில் அடங்கிய தரவுகளைத் திருத்தியமைக்கும் பொருட்டு விண்ணப்பித்து, திணைக்களத்தினால் அவ்விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அத்தகைய அனைத்து விதமான திருத்தங்கள், அவதானிப்புகள் மற்றும் மாற்றங்கள் பக்கங்களில் சேர்க்கப்படும்.
(பதிவிறக்கம் செய்த அச்சிடப்பட்ட விண்ணப்பப் பத்திரங்கள் மூலமாக) ஏனைய மாற்றியமைத்தல்கள் புதுப்பித்தல்கள், மாற்றியமைத்தல்கள் அல்லது செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கான விண்ணப்ப பத்திரங்களை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்?
புதுப்பித்தல், மாற்றியமைத்தல் மற்றும் காலத்தை நீடித்துக்கொள்ள எவ்வளவு காலம் செல்லும்?
1 மணி நேரம் 30 நிமிடங்கள் புதுப்பித்தல், மாற்றியமைத்தல் மற்றும் காலத்தை நீடித்துக்கொள்வதற்கான கட்டணம் யாது? கீழேயுள்ள அட்டவணையில் பார்க்கவும். எனது விண்ணப்பப் பத்திரத்தை ஒப்படைப்பது எவ்வாறு? கடவுச்சீட்டொன்றில் தகவல்களில்/ விபரங்களில் மாற்றங்களைச் செய்வதற்காக சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்பத்திரத்துடன் கீழ்க் காணும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளவாறு தேவையான ஆவணங்களை, அவற்றின் நிழற் பிரதிகளுடன் சமர்ப்பித்தல் வேண்டும். கவனிக்க – மூலப்பிரதிகள் சகிதம் நிழற்பிரதிகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
|

















