மாவட்ட செயலாளர்

திரு. பிரசன்ன மதநாயக
மாவட்ட செயலாளர்
அரசு சேவை மையங்கள்

பொலிஸ் நிலையங்கள்
மருத்துவமனைகள்
பாடசாலைகள்
தபால்அலுவலகங்கள்
ரயில் நிலையங்கள்
ஏனைய அனைத்து அரச நிறுவனங்கள்
Uncategorised
- விவரங்கள்
- எழுத்தாளர்: Super User
- பிரிவு: Uncategorised
எங்கள் பெறுமதிகள் மற்றும் நோக்கங்கள்
| மாவட்ட செயலகத்தின் பெறுமதிகள் | |
|
வெளிப்படைத்தன்மை |
சகல கருமங்களும் திட்டமிடப்பட்டு, பங்குபற்றுதல் முறையொன்றுடன் நம்பிக்கையுடன் செயற்படுத்தப்படல் |
|
செயற்திறன் |
சகல வளங்களிலும் உச்ச பயன்பாட்டினைப் பெறுதல். |
|
உற்பத்தித்திறன் |
ஒரு கருமத்தை சரியாக நிறைவேற்றுதல் |
|
பொறுப்பு |
ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுதல். |
|
பொறுப்பு கூறல் |
ஒப்படைக்கப்பட்ட கடமைகளுக்கு அப்பால் சென்று புதுமைப்படைப்பபை மேற்கொள்ளுதல் |
|
பாகுபாடற்ற |
அனைத்து மக்களையும் சமமாக மதித்தல் |
|
மாவட்ட செயலகத்தின் நோக்கங்கள் |
|
|
மாவட்டத்தின் சமூக நலன்புரி நடவடிக்கைகளை மேம்படுத்தல். |
|
|
மாவட்டத்தின் சமூக கலாச்சார மற்றும் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தல். |
|
|
மாவட்ட செயலகத்தின் உள்ளகத் தொழிற்பாடுளை மேம்படுத்தல். |
|
|
மாவட்டத்தில் உள்ள அரசாங்க காணிகளை நிர்வகித்தல். |
|
|
மாவட்டத்தில் முறையான நிதி நிர்வாகத்தினை ஏற்படுத்தல். |
|
|
மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்திச் செய்தல். |
|
|
மாவட்டத்தில் வாழ்வாதார அபிவிருத்துயினூடாக பாதுகாப்பான பொருளாதார முறைமை ஒன்றினை உருவாக்குதல். |
|
|
மாவட்டத்தில் சமய மறுமலர்ச்சிக்கு செயலாற்றுதல். |
|
|
மாவட்டத்தில் உள்ள நீர் ஏந்து பிரதேசங்களை பாதுகாத்தல் மற்றும் சுற்றாடல் பாதிகாப்பு |
|
|
உள்ளக மற்றும் வெளி வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமான அலுவலக சூழலை ஏற்படுத்துதல். |
|
|
மாவட்டத்தில் மும்மொழிக் கொள்கையினை அமுல்படுத்துதல். |
|
|
மாவட்டத்தில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான நடவடிக்கைகள். |
|
|
மாவட்டத்தில் அனர்த்தங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள். |
|
|
மாவட்டத்தில் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகள். |
|
மாவட்டத்தின் ஒரு கண்ணோட்டம்
மாவட்டத்தின் ஒரு கண்ணோட்டம்
இலங்கையின் மத்திய பிரதேசமாகக் கருதப்படும் மாத்தளை மாவட்டம் 1993.3 சதுர கி.மீ பரப்பளவைக்கொண்டது. மத்திய மாகாணத்தின் வட பகுதியினை பிரதிநிதித்துவப்படுத்தும் மாத்தளை மாவட்டம் அகலாங்கு 800 28’ இல் இருந்து 800 59’ வரையும் நெட்டாங்கு 70 24’ இல் இருந்து 80 01’ வரையும் பரந்திருக்கின்றது.வடக்கில் அநுராதபுரத்தையும் கிழக்கில் பொலன்னறுவை, பதுளை மற்றும் அம்பாறையையும் தெற்கில் கண்டியையும் மேற்கில் குருநாகலையையும் மாவட்ட எல்லைகளாகக்கொண்ட மாத்தளை தீவின் இயற்கை வளங்கள் நிறைந்த பிரதேசங்களில் ஒன்றாகும்.
மாத்தளை எனும் பெயர் பெறுவதற்குக் காரணமாக பல்வேறு சனப்பிரவாதங்கள் கூறப்படுகின்றன. பண்டுகாபாய மன்னனால் தன் மாமனாருக்கு கொடுக்கப்பட்ட பிரதேசமான மா துள எனும் குடியிருப்பு பின்னர் மாத்தளையானதாக சனப்பிரவாதம் உண்டு. மேலும் கஜபா மன்னர் காலத்தில் சோழ இராச்சியம் முற்றுகையிடப்பட்டு 12000 மஹ தலயர்களை கொண்டு வந்து குடியமர்த்திய காரணத்தினால் மஹதலய மாத்தளை ஆனதாகச் சொல்லப்படுகிறது. உயர்ந்த மலைகளினால் சுற்றி வளைக்கப்பட்ட சமவெளியைக் கொண்டிருப்பதனால் மஹ தலாவ மாத்தளை ஆனதாகச் சொல்லப்படும் அதேவேளை இக் கூற்றானது இன்றும் ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணமாகும்.
உலகின் மிகச் சிறந்த நிர்மாணமான சீகிரியாவும் இயற்கையின் அபூர்வக்கொடையான நக்கிள்ஸ் மலைத்தொடரையும் கொண்டுள்ள இம் மாவட்டம் 11 பிரதேச செயலகங்களைக் கொண்ட 1373 கிராமங்களை உள்ளடக்கிய 4 இலட்சம் மக்கள் வசிக்கும் ஒரு பிரதேசமாகும்.
இலங்கையின் மத்திய மாகாணத்தின் வட பகுதியினை சித்தரிக்கும் மாத்தளை மாவட்டத்தின் அமைவிடம் மற்றும் பூகோளவியல் விபரங்கள் நில அளவைத் திணைக்கள வரைபடத்தில் (1:63360) அளவிடையில்- தம்புள்ளை, நாலந்த, குருநாகல், பொலொன்னறுவை, எலஹெர மற்றும் ரன்வல) என்னும் ஓர் அங்குல வரைபடங்களினால் சித்தரிக்கப்பட்டுள்ளது.
மலைநாட்டுக்குரிய கொட்சயிட் வகைப்பாடு பந்தித நைஸ், கருங்கல், கெலிக்நைஸ், சுண்ணாம்புக் கல்,டொலமையிற் மற்றும் கொண்லையிற் வகுப்பிற்கு உரித்தான கானற்,சிலமனயிற், பிஸ்ற் மற்றும் கிரபயிற் ஆகிய கனியங்களினால் மாத்தளை மாவட்டம் உள்ளடக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் மலைப்பாங்கான பிரதேசத்தை ஓர் அலகாக எடுத்துக்கொள்ளுமிடத்து பிரதான கனிய வளம் வானோகயிற் ஆகும். இப் பிரதான கனியவளம் காலஞ் செல்லச் செல்ல பூமியின் உட்பகுதியில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு மேல் மற்றும் கீழ் வளைவுகளில் சிக்கலான தோற்றங்களை உருவாக்குகின்றது. இவ்வாறான இலட்சணங்களை நக்கிள்ஸ் மலைத்தொடர்களுக்கு அண்மையில் காணக்கூடியதாக உள்ளது. மண் அரிப்புக்கு ஈடுகொடுக்க முடியாத மற்றும் இலகுவில் ஜீரணமாகும் கானற், சிலிமனையிற் மற்றும் பெல்ஸ்பர் போன்ற கனியங்கள் அமைந்திருப்பதனால் அதன் பிரதிபலனாக நக்கிள்ஸ் மற்றும் ஹுன்னஸ்கிரிய மலை சார்ந்த பிரதேசங்களில் கடுமையான மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இப் பிரதேசங்களில் வருடாந்த மழைவீழ்ச்சி 1900 மி.மீ அதிகமாக இருப்பதனால் இந் நிலைமை மேலும் மோசமாகி உள்ளது.
மாத்தளை மாவட்டத்தின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள மகாவலி சமவெளியை அண்மித்த பிரதேசம் பூகோள வகுப்புக்கு அமைய விஜயன் வகுப்புக்கு உட்பட்டதாகும். மகாவலி கங்கை மேவிப் பாயும் சமவெளியாகிய இவ் வலயம் விசேடமாக செழிப்பான வண்டல் மண் கொண்டதாக இருக்கின்றது. இதனால் நெற் செய்கைக்கு பொருத்தமான பிரதேசமாக மாவட்டத்தின் கிழக்கு அரைவாசி பகுதியைக் குறிப்பிடலாம்.
மாத்தளை மாவட்ட பூகோள அமைப்பினைக் கருத்திற்கொள்ளும்போது அதனை 3 பிரதான பகுதிகளாக பிரித்துக் காட்டலாம்.
- வடக்குச் சமவெளி
- மாத்தளை வட்ட வடிவ பள்ளத்தாக்கு மற்றும் நக்கிள்ஸ் பிரதேசம்.
- லக்கல சமாந்தர மலைத்தொடர்கள்
வடக்கு நோக்கிய சமவெளிக்கு பொதுவாக மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ளை, கலேவெல, பல்லேபொல பிரதேச செயலகங்கள் உரியதாகும். இடையிடையே உயர்ந்த மலைகளினாலும் சிறு குன்றுகளினாலும் நிறைந்த இப் பிரதேசம் பொதுவாக சமவெளியாகவும் மற்றும் கரடுமுரடான நில தோற்றத்தையும் காண்பிக்கின்றது. இப் பிரதேசத்தில் அமைந்துள்ள குன்றுகளில் சீகிரிய, தம்புள்ளை,பேலியகந்த ஆகியன புராண காலத்திலிருந்தே பிரசித்தி பெற்றவை. இச் சமவெளியானது பொதுவாக 500 -1000 அடி வரையான உயரத்தைக் காண்பிக்கின்றது. இச் சுருக்கங்கழளுடனான தரையின் பள்ளத்தாக்குகளுக்கிடையே ஓடும் நதிகளை மறித்து கட்டிய குளங்கள் பல புராண காலங்களில் இருந்துள்ளன. அவற்றில் கண்டலம, தேவஹூவ ஆகிய பாரிய குளங்கள் பிரதானமானவை ஆகும். இவற்றிற்கு மேலதிகமாக இனாமழுவ தல்கொடே மற்றும் சீகிரிய போன்ற சிறிய குளங்களும் உள்ளன. இச் சமவெளியில் பாய்ந்தோடும் கிளை நதிகளின் மூலம் இராசரட்டை குளங்கள் போஷிக்கப்படுகின்றது. அவற்றில் கலாவெவ குளம் மற்றும் மின்னேரியாக் குளம் பிரதானமானவையாகும்.
மாத்தளைப் பிரதேசம் பூகோளவியல் ரீதியாக ஒரு வட்ட வடிவ பள்ளத்தாக்காக காண்பிக்க முடியும். அதற்கான பிரதான காரணம் மாத்தளை நகரம் மலைத்தொடர்களினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளமையாகும். நக்கிள்ஸ், குரழுஹெல – பன்சல்தென்ன, ஓவிலிகந்த மற்றும் ஹுன்னஸ்கிரிய மலைத்தொடர்களினால் சுற்றிவளைக்கப்பட்ட மாத்தளை நகரை அண்மித்த பிரதேசங்கள் இவ்வாறான வட்ட வடிவ பள்ளத்தாக்கை உருவாக்குகின்றது. மாத்தளை நகரத்தில் இருந்து இதனை தெளிவாக அவதானிக்க முடியும். இப் பிரதேசத்தின் பூகோளவியல் அடையாளங்களை சிக்கலாக்கும் விதத்தில் பாய்ந்தோடும் ஆறு சுது கங்கை ஆகும். இவ் ஆறானது மேற்குறிப்பிடப்பட்ட மலைத் தொடர்களில் இருந்து பாய்ந்து வரும் அருவிகளினால் போஷிக்கப்படுகிறது. மாத்தளையில் இருந்து இரத்தோட்டை ஊடாக கிழக்குப் பக்கமாகச் செல்லும்பொழுது கரடு முரடான பூகோளவியற் குறைபாடுகளைக் காட்டும் நக்கிள்ஸ் மலைத்தொடரை அடையலாம். மூடிய கையில் இருக்கும் மூட்டுக்களை ஒத்ததாக இது அமைந்திருப்பதனால் இம்மலைத்தொடர் இப்பெயரினைப் பெற்றுள்ளது.
ஐந்து உச்சிகளைக்கொண்ட இம் லைத்தொடரின் சராசரி உயரம் 400 அடிகள் வரையாகும்.
இயற்கை வனத்தில் தீவின் எந்தவொரு பிரதேசத்திற்கும் பின்னிற்காத இப்பிரதேசத்தை பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. இம் மலைத் தொடரில் இருக்கும் தனியான மலைகளிலே லக்கல மற்றும் கழுபஹன மலைகள் பிரசித்தி பெற்றவை.
மாவட்டத்தின் வனப் பரம்பலும் சிக்கலானதே. அங்கு மத்திய,தென்மேற்கு மற்றும் மேற்குப் பிரதேச காடுகள் ஈரவலய காடுகளையும் வடக்கு மற்றும் லக்கல- வில்கமுவ பிரதேசங்கள் கரையோரப் பிரதேச வெப்ப வலய காடுகளையும் உள்ளடக்கியதாகும். பிரதான பருவப்பெயர்ச்சிக் காற்றுகள் 2 இனாலும் மழையைப்பெற்றாலும் கூடிய மழைவீழ்ச்சியைப் பெறுவது தென் கீழ் பருவப்பெயர்ச்சிக் காற்றினாலாகும். நக்கிள்ஸ் மலைத் தொடர் அருகில் பல்வேறுவகையான ஜீவ வகைகளைக் காட்டும் அதேவேளை இது இலங்கைக்கு கிடைத்த ஒரு பிரதான கொடையென கருதலாம். ஹோட்டன் சமவெளிக்கு மிகவும் ஒத்ததான ஆனால் விசாலம் இல்லாத சமவெளி ஒன்று பிடவெலவுக்கு அருகில் அமைந்துள்ள அதேவேளை சிறிய அகலபாதாளம் ஒன்று அதன் ஒரு அந்தத்தில் அமைந்துள்ளது.
- சரித்திரப் பின்னணியும் அதன் முக்கியத்துவமும்
மாத்தளை மாவட்டத்தின் சரித்திரத்தினை ஆராயும் போது பிராக் சரித்திர யுகத்தில் அரக்கர்கள் வாழ்ந்த பிரதேசமாக இருந்ததிற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைபொருள் பரம்பலின்படி மாவட்டத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் இவர்கள் பரந்து வாழ்ந்திருக்கிறார்கள் என்று காணப்படுகின்றது. இப் பிரதேசங்களில் அமைந்திருக்கும் தனிமையான செங்குத்துப் பாறைகள் அவர்களின் தொழில்களை நடாத்துவதற்கு மிகவும் உதவியாக இருந்தது. 300 வருடங்கள் பழமையான சடலம் ஒன்று தம்புள்ளைக்கு அருகில் உள்ள இப்பன்கடுவ பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அதேவேளை மேற்கூறிய காரணங்களை உறுதிப்படுத்தும் பிரபல சான்றாக இதனை எடுத்துக்கொள்ளலாம்
இற்றைக்கு 400 வருடங்களுக்கு முன் வாழ்ந்த உலகப் பிரசித்திபெற்ற இராவணனின் தலைநகரம் தற்போதைய லக்கலவுக்கு அருகில் இருக்கும் லகேகல அல்லது லங்காபுர என்று சொல்லப்படுகிறது. இராவணா எனும் பெயர் சம்பந்தப்பட்ட இடங்கள் சில இன்றும் லக்கல அண்மித்த இடங்களில் இருக்கின்றது. விஜய அரசன் இலங்கைத் தீவிற்கு வந்து இறங்கிய சந்தர்ப்பத்தில் நூல் நூற்றுபவராக இருந்த குவேனியின் சொந்த இடம் கலேவெலவுக்கு அருகில் உள்ள பம்பாவ என்று வம்சக் கதைகளில் கூறப்படுகிறது. அவளின் தந்தையும் பம்பா எனும் பெயர்பெற்ற அதேவேளை அவர் அப்பிரதேசத்தின் ஆட்சியாளரானார். அரக்கர்களை அழித்த பிறகு இப்பிரதேசம் பாழடைந்ததாகச் சொல்லப்படுகிறது.
கிறிஸ்துவுக்கு முன்னரான நூற்றாண்டளவில் ஶ்ரீ மகாபோதியுடன் இந் நாட்டுக்கு வந்த ஆரியர்களினால் அப் பிரதேசங்களில் குடியிருப்புக்களை ஏற்படுத்தியதாக சரித்திரப் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு குடியிருப்புக்கள் விரிவாக்கல் அடைவதற்கு பிரதான காரணமாக அமைந்தது நெற்செய்கைக்காக போதியளவு நீர் பெற்றுக்கொள்ள முடியாமையாகும். 1 வது கஜபா மன்னன் சோழ இராச்சியத்தை ஆக்கிரமித்து அங்கிருந்து அழைத்து வந்த 12000 பேர் குடியமர்த்தப்பட்டது மாத்தளையை அண்மித்த பிரதேசங்களில் என சனப்பிரவாதங்களில் கூறப்படுகின்றது. மாத்தளை கடயிம் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளவாறு ஆரியர்கள் இலங்கையின் பல்வேறு இடங்களில் குடியமர்ந்த அதேவேளை அதில் 17 இடங்கள் தற்போதைய மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ளது. அதில் பெரும்பான்மையானவை கலேவெல மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களாகும்.
மாத்தளையின் சரித்திரத்தில் கீர்த்திமிக்க காலம் கி.மு 77 – 89 வரையான வலகம்பா அரசனின் காலமாகும். மாத்தளை அலுவிகாரையில் நடைபெற்ற திரிபீடகத்தை நூல்வடிவில் ஆக்கும் நிகழ்வு இடம்பெற்றது இக் கால கட்டத்தில் ஆகும். அடுத்த சுவர்ணமுகயுகம் ஆரம்பமாவது கி.மு 479 - 497 வரையான காலமாகும். தன் தந்தையைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றிய காசியப்ப அரசன் தனது தலைநகராக தம்புள்ளையை அண்மித்த சீகிரியாவைத் தேர்ந்தெடுத்தான். அவரினால்அநுராதபுர ஶ்ரீ விபூதி சீகிரியவுக்கு எடுத்து வரப்பட்டு அங்கு பாரிய நிர்மாணம் ஒன்றினை செய்வித்தான்.அதுவரையில் காட்டு ஆரன்ய சேனையாக இருந்த சீகிரியவை அழகிய கலைப்பொக்கிஷமாக மாற்றிய பெருமை இவரையே சாரும். 18 வருடங்கள் ஆட்சி புரிந்த அவரின் நிர்மானங்கள் இன்றும் உலகத்தவரை வியக்கவைக்கும். அவரினால் சீகிரியவைச் சுற்றி அமைக்கப்பட்ட கட்டடங்கள் மற்றும் நீரியல் தொழிநுட்பம் நவீன பொறியியல் தொழில் நுட்பத்திற்கு சவாலாக அமைந்துள்ளது. அவ்வாறே சீகிரிய குன்றில் வரைந்த சுவரோவியங்களும் மிகச்சிறந்த நிருமானம் என்பது. வெளிப்படை.
அநுராதபுர ஆட்சிக் காலத்தின் இறுதியில் மானவம்ம அரசர் காலத்தில் கிடைக்கப்பெற்ற இன்னுமொரு கொடையாக நாலந்தா கெடிகெயவைக் கூறலாம். பல்லவ கட்டடக் கலைக்கு அமைய இந்து சமயத்துக்கு ஒத்ததான கலைவடிவம் கொண்ட நிருமானமாக இதனைக் கருத்திற் கொள்ளக்கூடிய அதேவேளை தீவின் மத்திய கேந்திர நிலையம் இதுவென சொல்லப்படுகிறது. பொலொன்னறுவையின் முதல் ஆட்சியாளராகிய விஜயபாகு மன்னன் சோழர்களிடமிருந்து நாட்டை மீட்பதற்கான சதித்திட்டத்தை தீட்டியது தம்புள்ளைக்கு அருகில் இருக்கும் மெனிக்தென எனும் பெயருடைய இடத்திலாகும். அவ்வாறே தன்னுடைய பிரதான போரிடும் மத்திய நிலையமாகவும் இதனைத் தேர்ந்தெடுத்தான்.
1 ஆம் பராக்கிரமபாகு மன்னன், பொலொன்னறுவையை ஆண்ட கஜபாகு மன்னனுக்கு எதிராக நடத்திய போருக்கான பிரதான போரிடும் மத்திய நிலையமாக தேர்ந்தெடுத்தது நாலந்தாவை ஆகும். இதற்கு மேலாக செலகம, போகம்பரை லக்கல, ரணமுரே, அம்பன ஆகிய பிரதேசங்ளையும் போரிடும் மத்திய நிலையங்களாகத் தேர்ந்தெடுத்தான். பொலொன்னறுவையை கடைசியாக ஆட்சி செய்த நிஸ்ஸங் மல்ல மன்னன் தம்புள்ளை விகாரயை தங்கமுலாம் பூசி புனர்நிர்மானம் செய்தான்.
அதேவேளை அதன் பின்னர் அது ரங்கிரி தம்புள்ளை எனும் பெயர் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. அவ்வாறே அவருடைய சிம்மாசனத்தை உருவாக்குவதற்காக பேலியகந்த எனும் இடத்தில் இருந்து கற்பாறை ஒன்றினை எடுத்துச் சென்றதாகச் சொல்லப்படுகிறது.
கம்பளையில் வாழ்ந்த 3 ஆம் விக்கிரமபாகு மன்னனுக்கு எதிராக வடபகுதியில் வாழ்ந்த தமிழ் மன்னனாகிய ஆரிய சக்கரவர்த்தியினால் படையொன்று அனுப்பப்பட்டதனை அறிந்து ரய்கம என்னும் ஊருக்கு தப்பியோடினான். அத் தமிழ்ப் படைகள் மாத்தளை நகருக்கு அண்மையில் நிலைகொண்டிருந்த வேளையில் சுயாதீனமாக மாத்தளையில் வசிக்கும் மக்கள் அவர்களுடன் சண்டையிட்டார்கள். அங்கு தமிழ்ப் படையினரின் பலபேர் கொல்லப்பட்ட அதேவேளை மீதியானவர்கள் தப்பியோடினார்கள். இது இலங்கைச் சரித்திரத்திலேயே ஆட்சியாளர்களின் வழிகாட்டலின்றி நடைபெற்ற ஒரேயொரு சமராகச் சொல்லப்படுகிறது.
கோட்டை யுகத்தில் 6 ஆவது பராக்கிரமபாகு மன்னனின் பின்பு இலங்கையின் ஒற்றுமை சீர் குலைந்தது. அதன் பின்பு மலைநாட்டு இராச்சியத்தின் ஒரு பகுதியாகிய மாத்தளைப் பிரதேசத்திற்கு யுவ அரசனாக விஜயபால அரசகுமாரன் நியமிக்கப்பட்டான். இக் காலத்தில் மலை நாட்டு இராச்சியத்தின் ஆட்சியில் இருந்தவர் இவரின் தந்தையாகிய செனரத் மன்னனாவான். கொடபொலவில் தனது மாளிகையை அமைத்து அங்கிருந்து ஆட்சிசெய்த விஜயபால குமாரன் சிறந்த போர் வீரன் ஆவான்.போர்த்துக்கேயருடன் சண்டையிட்டு அவர்களை படுதோல்வியடையச் செய்ய இவ் அரசகுமாரனால் முடிந்தது. கி.பி. 1635 இல் இவ் அரசகுமாரன் மாத்தளையில் இருந்து தப்பியோடிய அதேவேளை அன்றிலிருந்து மாத்தளை மலைநாட்டு இராச்சியத்திற்கு உள்ளாகியது. 1815 இல் மாத்தளை பிரதேசம் உட்பட மலைநாட்டு இராச்சியம் பிரித்தானியர்களின் ஆட்சிக்கு உட்பட்டது. பிரித்தானியர்களுக்கு மாத்தளை பிரதானமாகப்பட்டது யாதெனில் பெருந்தோட்டச் செய்கை மற்றும் திருகோணமலை கண்டி வீதி மாத்தளை ஊடாகச் சென்றமையுமாகும். சோழர்கள் மற்றும் தமிழர்களின் முற்றுகையின்போது ராஜரட்டை அரசர்கள் மலைநாட்டுக்கு தப்பியோடுவதற்கு பாவித்தது மாத்தளையூடாக உள்ள பாதையாகும். விசேடமாக மலைநாடும், ராஜரட்டையும் , திருகோணமலையும் தொடர்புபட்டது மாத்தளை ஊடாகவாகும். 1803 மற்றும் 1815 மலைநாட்டு முற்றுகைக்கு பிரித்தானியர்கள் இப் பாதையையே பாவித்தனர். 1803 ஆம் ஆண்டு முற்றுகைக்கு அவர்கள் மாத்தளைக்கு அண்மையாக மென்டவால் கோட்டையை அமைத்த அதெவேளை முற்றுகை தோல்வியடைந்ததுடன் அதுவும் அழிந்துபோயிற்று. தற்போது மாத்தளையின் பிரதான சுடுகாடாக பாவனையில் இருப்பது அக்கோட்டை இருந்த பிரதெசமான அதேவளை அதன் எச்சங்களை இன்றும் காணக்கூடியதாக உள்ளது.
1848 இல் இடம்பெற்ற கலகம் மாத்தளை சரித்திரத்திலேயே பிரதான சந்திஸ்தானமாகும். இக் கலகத்தினை முழுமையாக திட்டமிட்டு நடைமுறைப்படுத்தியது மாத்தளை மாவட்டதிலாகும். வீரபுரன் அப்பு மற்றும் கொங்காலேகொட பண்டா அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட இக் கலகம் தோல்வியடைந்ததையிட்டு தலைவர்கள் அனைவரும் மாத்தளையில் சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள்.
இலங்கைக்குகீர்தியைப்பெற்றுக்கொடுத்த எஹலேபொல நிலமே, எடிபொல நிலமே மற்றும் வீர மெத்தும பண்டாரவினதும் அண்மைக்காலத்தில் இலங்கையின் முதல் தேசாதிபதி மற்றும் ஜனாதிபதியாகிய வில்லியம் கோபல்லாவ அவர்களினதும் சொந்த இடம் மாத்தளை மாவட்டமாகும். அவ்வாறே கண்டு இராச்சிய அரசர்களின் நம்பிக்கையைப்பெற்ற நிலமேக்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பலர் மாத்தளை மாவட்டத்தை தமது சொந்த இடமாகக் கொண்டவர்கள் ஆவர்.
அவ்வாறே சுதந்திரம் அடைத்த்தன் பின்னர் இதுரை பல அரசாங்க அதிபர்களினால் மாத்தளை மாவட்ட நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. அதற்கமைய மாவட்டத்தில் பல்வேறு வளங்கள் மற்றும் அபிவிருத்தி சாத்தியப்பாடுளை இனம் கண்டு மாவட்டத்தின் முன்னேற்றம் கருதி பல்வேறு பாரிய வேலைத்திட்டங்கள் இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இந்த அரசாங்க அதிபர்களில் திரு.சிறில் கமகே மற்றும் திரு. நீல் த அல்விஸ் ஆகியோர் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிற்கு செயலாளர்களாக பதவி உயர்வு பெற்று சென்றுள்ளமையானது விஷேட அம்சமாகும். மேலும் மாத்தளை மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமை புரிந்த திரு. காமினி செனவிரத்ன என்பவர் அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராக சேவை புரிந்துள்ளமையும் அவ்வாறான ஓர் சந்தர்ப்பமாகும். இதற்கு மேலதிகமாக மாத்தளை மாவட்டத்தில் முதலாவது ஓர் பெண் அரசாங்க அதிபராக திருமதி.ஹெலன் மீகஸ்முல்ல அவர்கள் கடமை புரிந்துள்ளமையும் பிரதான அம்சங்களில் ஒன்றாகும்.
மாவட்டத்தின் அடிப்படை தகவல்களின் சுருக்கம்
| மொத்த நிலப்பரப்பளவு (ச.கி.மீ) |
1993 |
| பிரதேச செயலாளர் பிரிவுகளின் எண்ணிக்கை | 11 |
| கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் எண்ணிக்கை | 545 |
| கிராமங்களின் எண்ணிக்கை | 1483 |
| மாநகர சபைகளின் எண்ணிக்கை | 02 |
| பிரதேச சபைகளின் எண்ணிக்கை | 11 |
| பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை | 10 |
| விவசாய சேவை மையங்கள் | 23 |
| வாக்குச் சாவடி மையங்களின் எண்ணிக்கை | 327 |
| சர்க்யூட் பங்களாக்கள் | 10 |
| பாராளுமன்ற அங்கத்தவர்கள் | |
| பாராளுமன்ற அங்கத்தவர்கள் | 05 |
| மாகாண சபை உறுப்பினர்கள் | 00 |
| பிரதேச சபை | 284 |
| சனத்தொகை | |
| மொத்த சனத்தொகை | 514300 |
| ஆண்கள் | 248310 |
| பெண்கள் | 266290 |
| இன அடிப்படையிலான சனத்தொதொகை | |
| சிங்களவர்கள் | 80.7% |
| முஸ்லிம்கள் | 9.2% |
| இலங்கை தமிழர்கள் | 5% |
| இந்திய தமிழர்கள் | 4.8% |
| பறங்கியர்கள் | 0.3% |
| கல்வி | |
| கல்வி வலயங்களின் எண்ணிக்கை | 04 |
| பாடசாலைகளின் எண்ணிக்கை | 323 |
| மாணவர்களின் எண்ணிக்கை | 101367 |
| ஆசிரியர்கள் எண்ணிக்கை | 6233 |
| ஆசிரியர்கள் விகிதாசாரம் | 1:17 |
|
சுகாதாரம் |
|
| பிரதான வைத்தியசாலை | 01 |
| ஆதார வைத்தியசாலை | 01 |
| பிரதேச வைத்தியசாலைகள் | 18 |
| கனிஷ்ட சுகாதார சிகிச்சைப் பிரிவுகள் | 15 |
| சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் | 15 |
| பொது சுகாதார பரிசோதனைகள் பிரிவுகள் | 40 |
| குடும்ப சுகாதார சேவை பிரிவுகள் | 172 |
|
வீதிப் பரம்பல் |
|
| ஏ தரத்திலான வீதிகள் | 97.2Km |
| பீ தரத்திலான வீதிகள் | 286.0Km |
| சீ ,டீ.ஈ தரத்திலான வீதிகள் | 4554.94Km |
| வழிபாட்டுத் தலங்கள் | |
| பௌத்த விகாரைகள் | 420 |
| கோயில்கள் | 99 |
| முஸ்லிம் பள்ளிவாசல்கள் | 69 |
| கத்தோலிக்க தேவாலயங்கள் | 28 |
மாவட்ட செயலகத்தின் செயற்பாடுகள்
| தொ/இல | பிரிவு | கருமங்கள் |
| 01 |
தாபன மற்றும் நிர்வாகப் பிரிவு |
பிரதேச நிருவாக நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து மாவட்ட நிருவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளல் (உத்தியோகத்தர்கள் தொடர்பான சகல தாபனச் சேவைகள், கிராம அலுவலர்கள் தொடர்பான தாபனச் சேவைகள், வாகனங்கள் சம்பந்தமான அலுவல்கள் போன்றவை) |
| 02 | கணக்குப்பிரிவு | பிரதேச செயலகங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக் கொடுத்து சீரான நிதி முகாமைத்துவத்தை மேற்கொள்ளல் |
| 03 | திட்டமிடல் பிரிவு | பிரதேச மட்டத்தில் இடம்பெறும் சகல திட்டமிடல் வேலைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் அவற்றின் முன்னேற்ற கட்டுப்பாட்டு அலுவல்களை மேற்கொள்ளல். |
| 04 | காணிப்பிரிவு | காணிப் பிணக்குகள் தொடர்பான ஒருங்கிணைப்பு வேலைகளை மேற்கொள்ளல் |
| 05 | அபிவிருத்திப் பிரிவு | மாவட்ட மக்களின் வாழ்வாதார அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் அவற்றின் முன்னேற்றத்தினை மேற்பார்வையிடல் |
| 06 | வெடிபொருட்கள் கட்டுப்பாட்டுப் பிரிவு | துப்பாக்கி உத்தரவுப் பத்திரம் விநியோகித்தல், வெடி பொருட்களுக்கான உத்தரவுப் பத்திரங்கள் விநியோகித்தல் சம்பந்தமான நடவடிக்கைகள் |
| 07 | விவசாயப்ப பிரிவு | மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகள் மற்றும் சுற்றாடல் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் அது சம்பந்தமான பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் |
| 08 | பயிற்சிப் பிரிவு | மாவட்ட பரிபாலன நடவடிக்கைகளுக்கு தொடர்பான சகல உத்தியோகத்தர்களின் மனித வள அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளல் ( பயிற்சி வழங்குதல், திறமைகளை மேம்படுத்தல்) |
| 09 | கணக்காய்வுப் பிரிவு | நிதி மோசடிளைத் தடுப்பதற்காக உள்ளக நிர்வாக முறையொன்றனை ஏற்படுத்துதல் |
| 10 | பொறியியல் பிரிவு | மாவட்டத்தில் நிருவாக நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்கான மூலதன முதலீடுகள் தொடர்பான சகல நிர்மான வேலைகளையும் திட்டமிடுதலும் அவற்றினை மேற்பார்வை செய்தலும் |
| 11 | சமுர்த்தி பிரிவு | வாழ்வாதார அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தை அமுல்படுத்தல் |
| 12 | அனர்த்த முகாமைத்துவப் பிரிவு | அனர்த்த முகாமைத்துவ முன் ஆயத்த திட்டம் தயாரித்தல் மற்றும் அவற்றை அமுல்படுத்தல் |
| 13 | பௌத்த மத அலுவல்கள் பிரிவு | மாவட்டத்தில் ஆன்மீக அபிவிருத்தி மற்றும் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் |
| 14 | ஊடகப் பிரிவு | மாவட்ட தகவல்ளை தயாரித்தல். |
| 15 | மனித வள மற்றும் தொழிற்துறவுகள் பிரிவு | தொழிற்துறவுகள் திறண்சார் நிகழ்ச்சித் திட்டங்களை அமுல்படுத்தல் |
| 16 | சமூக சேவைப் பிரிவு | மூத்த குடிமக்கள், ஊனமுற்ற பெண்கள் மற்றும் சிறுவர்கள் ,நோய் நிவாரணம், முன்பராய சிறுவர் அபிவிருத்தி, சிறுவர் நன்னடத்தைகள் நடவடிக்கைகள் |
| 17 | உற்பத்தித்திறண் பிரிவு | மாவட்டத்தில் செயற்திறண் மிக்க நிறுவைகள் மற்றும் தொடர்பான முறைகளை அமுல்படுத்தல் |
| 18 | மதியுரை பிரிவு மற்றும் விசாரணைப் பிரிவு | மனிதர்களின் பிரச்சினைகளை மதியுரை மூலம் விசாரித்தல் |
மாவட்டத்தின் இயற்கை வளங்கள் மற்றும் நிலங்களின் பயன்பாடு
மாவட்டத்தின் இயற்கை வளங்கள்
பிரதேசத்தின் கனிய வளங்களை கருத்திற்கொள்ளும்போது லக்கல பிரிவுக்கு உட்பட்ட களுகங்கை மற்றும் ஹத்தொட அமுன மாணிக்கக் கற்களுக்கும், வாரியபொல மற்றும் கைக்காவல மைக்கா படிமங்களுக்கும், தலாகொட மற்றும் ஓவல பீங்கான் செய்யப்பயன்படும் பெல்ஸ்பார் கனிய படிமங்களுக்கும் முக்கியமானதாகும். மேலும் சுண்ணாம்புக்கல் மற்றும் கருங்கற் தொழில்களும் இம் மாவட்டத்தில் பாரிய அளவில் நடைபெறுகின்றன.
|
காணியின் தன்மை |
காணியின்விஸ்தீரணம் (ஹெக்டயர்) |
சதவீதம் |
||
|
காடுகள் |
75,218 |
37.7 |
||
|
வீட்டுத் தோட்டம் |
37,631 |
18.9 |
||
|
பயிர்செய்யப்பட்ட வயல்நிலம் |
21,995 |
11.0 |
||
|
நீண்டகாலப்பயிர்கள் |
1 9,459 |
9.8 |
||
|
பிரதான பொருளாதார பெருந்தோட்டம் (தேயிலை, இறப்பர் , தென்னை ) |
17,250 |
8.7 |
||
|
ஏனைய பயிர்கள் ( பருவகாலப் பயிர்கள் ) |
6,716 |
3.4 |
||
|
பாரிய உள்நாட்டு நீர்த்தேக்கங்கள் |
7,050 |
3.5 |
||
|
தரிசு மற்றும் கைவிடப்பட்ட நிலங்கள் |
3,600 |
1.8 |
||
|
சாலைகள்/கட்டிடங்கள்/ மைதானங்கள் |
2,395 |
1.2 |
||
|
பற்றைகள் மற்றும் சேனை |
1,320 |
0.7 |
||
| ஏனையவை | 6,666 | 3.3 | ||
|
மொத்தம் |
199,300 |
100 |
||
மாவட்டத்தின் வருடாந்த மழைவீழ்ச்சி மற்றும் வெப்பநிலை
காலநிலை
| இல. | மாதம் |
சராசரி மழைவீழ்ச்சி (மி.மீ) |
ஈரப்பதன் % (ஒரு நாளைக்கு) |
| 01 | ஜனவரி | 7.6 | 73 |
| 02 | பெப்ரவரி | 33.5 | 73 |
| 03 | மார்ச் | 4.2 | 68 |
| 04 | ஏப்ரல் | 189.3 | 69 |
| 05 | மே | 44.8 | 67 |
| 06 | ஜூன் | 44.5 | 68 |
| 07 | ஜூலை | 98.0 | 69 |
| 08 | ஓகஸ்ட் | 93.6 | 76 |
| 09 | செப்டெம்பர் | 101.4 | 78 |
| 10 | ஒக்டோபர் | 339.2 | 82 |
| 11 | நவம்பர் | 53.6 | 78 |
| 12 | டிசெம்பர் | 349.3 | 81 |
சராசரி வெப்பநிலை
|
இல |
மாதம் |
சராசரி வெப்பநிலை (பாகை செல்சியஸ்) |
ஆகக்கூடிய வெப்பநிலை (பாகை செல்சியஸ்) |
|
01 |
ஜனவரி |
30.4 |
14.9 |
|
02 |
பெப்ரவரி |
31.8 |
16.7 |
|
03 |
மார்ச் |
34.8 |
15.0 |
|
04 |
ஏப்ரல் |
34.1 |
17.6 |
|
05 |
மே |
32.8 |
18.7 |
|
06 |
ஜூன் |
31.5 |
19.3 |
|
07 |
ஜூலை |
31.2 |
19.0 |
|
08 |
ஓகஸ்ட் |
30.0 |
19.3 |
|
09 |
செப்டெம்பர் |
30.1 |
18.9 |
|
10 |
ஒக்டோபர் |
30.3 |
18.4 |
|
11 |
நவம்பர் |
31.0 |
17.9 |
|
12 |
டிசெம்பர் |
30.0 |
17.7 |
மாவட்டத்திலுள்ள மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகள்
மாவட்டத்திலுள்ள மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகள்
மாத்தளை மாவட்டம் பல்வேறு காலநிலைத் தோற்றங்களுடன் அமைந்துள்ள மாவட்டமான அதேவேளை அதற்குள் வெப்ப மற்றும் ஈர வலயங்களும் உள்ளடங்குகின்றன. இக் காலநிலை தோற்றங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு விவசாயப் பயிர்கள் மாவட்டத்தினுள் பயிரிடப்படுகின்றது. அதன் பிரகாரம் மாவட்டத்தின் பெரும்பாலானவர்களின் பிரதான வாழ்வாதாரமாக அமைவது விவசாயமாகும். இப் பயிர்ச்செய்கைகளில் நெற் பயிர்ச்செய்கை பிரதானமான அதேவேளை அதற்கு மேலதிகமாக பெரிய வெங்காயப் பயிர்ச்செய்கை, ஊடு பயிர்ச்செய்கை, மரக்கறிப் பயிர்ச்செய்கை என்பனவும் பிரதான இடத்தை வகிக்கின்றது. மினிப்பே நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் வில்கமுவ பிரதேசத்தில் பாரிய அளவில் நெற் செய்கை மேற்கொள்ளப்படும் அதேவேளை தம்புள்ளை பிரதேசத்தில் பெரிய வெங்காயம் மற்றும் மரக்கறிச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக மாவட்டத்தில் சிறு ஏற்றுமதிப் பயிர்ச்செய்கையும் பாரிய அளவில் செய்யப்படும் அதேவேளை அதன் மூலமும் தமது வாழ்க்கையை நடத்தும் ஒரு பகுதி மக்களும் உள்ளனர். அவர்கள் மாத்தளை, யடவத்தை, உக்குவளை, அம்பன்கங்கை கோரளை, ரத்தோட்டை, லக்கல, நாவுல மற்றும் பல்லேபொல ஆகிய பிரதேசச் செயலகப் பிரிவுகளில் வாழ்கின்றனர். பயிர் செய்யப்படும் சிறு ஏற்றுமதிப் பயிர்களிடையே மிளகு, கோப்பி, கொக்கோ, கராம்பு என்பன பிரதான இடத்தை வகிக்கின்றது.
மேலும் மாவட்டத்தினுள் கைத்தொழில்களை தமது வாழ்வாதாரமாக் கொண்ட ஒரு பகுதி மக்களும் உள்ளனர். இக் கைத்தொழில்களில் மெழுகுப் பூச்சுக் கைத்தொழில், புற் கைத்தொழில், இனிப்புப் பண்ட உற்பத்தி, மட்பாண்டக் கைத்தொழில், செங்கற் கைத்தொழில், மாணிக்கக்கற் கைத்தொழில், வெதுப்பக கைத்தொழில் என்பன பிரதான இடத்தைக் கொண்டுள்ளன. மேலும் சேவைகள் பெற்றுக்கொடுப்பதைத் தமது வாழ்வாதாரமாக் கொண்ட குறிப்பிடத்தக்களவு மக்கள் இம் மாவட்டத்தில் வசிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
தொழில் தொடர்பான தகவல்கள்
தொழில்-தொடர்பான-தகவல்கள்
|
இல. |
வகை |
எண்ணிக்கை |
சதவீதம் |
|
01 |
கனிய அகழ்வு |
80 |
6.1 |
|
02 |
உணவு, குடிவகைகள் மற்றும் புகையிலை |
433 |
33.2 |
|
03 |
ஜவுளி, துணிகள் மற்றும் பாகங்கள் மற்றும் தோல் தயாரிப்புகள் |
259 |
19.8 |
|
04 |
மரம், மர பொருட்கள், தளபாடங்கள் |
190 |
14.5 |
|
05 |
காகித உற்பத்தி, அச்சிடும் நடவடிக்கைகள் |
19 |
1.5 |
|
06 |
இரசாயனங்கள், பெட்ரோலியம், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் |
47 |
3.6 |
|
07 |
உலோகம் அல்லாத கனிம உற்பத்திகள் |
63 |
4.8 |
|
08 |
அடிப்படை உலோகத் தொழில், உலோக உபகரணங்கள், இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தொழில், |
54 |
4.1 |
|
09 |
வேறு உற்பத்திக் தொழில்கள் |
128 |
9.8 |
|
10 |
நீர் சார்ந்த செயல்பாடுகள் மற்றும் நீர் வழங்கல்கள் |
33 |
2.5 |
|
மொத்தம் |
1,306 |
100.0 |
|
மாத்தளை-அரசாங்க அதிபர்களின் பெயர் பட்டியல்
| இல. | பெயர் | தொடக்கம் | வரை |
| 1 | திரு.ஏ.எல் பெரேரா | 1951 | 1956 |
| 2 | திரு.ஏ.ரத்தினம் | 1957 | 1957 |
| 3 | திரு.வி.பி.ஏ பெரேரா | 1957 | 1959 |
| 4 | திரு.யு.ஏ.குணரத்ன | 1960 | 1962 |
| 5 | திரு.கே.பி திஸாநாயக்க | 1962 | 1963 |
| 6 | திரு.வி.சி.பி உனந்தென்ன | 1963 | 1965 |
| 7 | திரு.எச்.ஆர் அமிதி | 1966 | 1966 |
| 8 | திரு.எஸ்.எல்.பி.அமுனுகம | 1966 | 1967 |
| 9 | திரு.எல்.பி.உடலாகம | 1968 | 1969 |
| 10 | திரு.எச்.ஏ.ஜி.அபேவர்தன | 1969 | 1971 |
| 11 | திரு.சிறில் கமகே | 1971 | 1976 |
| 12 | திரு.என்.ஏ.நவரத்ன | 1976 | 1978 |
| 13 | திரு. எஸ்.எம் தென்னக்கோன் | 1978 | 1986 |
| 14 | திரு.குணதிலக முதன்நாயக்க | 1986 | 1989 |
| 15 | திரு.ஜி டயஸ் அமரசிங்க | 1996 | 1999 |
| 16 | திரு.டி.பி அதாவுடா | 1999 | 1999 |
| 17 | திரு.ரம்யா சிறிவன்ஷா | 1999 | 2003 |
| 18 | திரு.கே.உடகே | 2003 | 2006 |
| 19 | திரு.எச்.எம் காமினி செனவிரத்ன | 2006 | 2010 |
| 20 | திருமதி.கே.எச்.ஈ.மீகஸ்முல்ல | 2010 | 2015 |
| 21 | திரு.நீல் டி அல்விஸ் | 2015 | 2016 |
| 22 | திரு. டி.பி.ஜி.குமாரசிறி | 2016 | 2018 |
| 23 | திரு. எஸ்.எம்.ஜி.கே பெரேரா | 2018 | 2021 |
| 24 | திருமதி தேஜானி திலகரத்ன | 2021 | 2025 |
| 25 | திரு.பிரசன்ன மதநாயக | 2025 | இப்போது வரை |
மாத்தளை உதவி மாவட்ட செயலாளர் பெயா் பட்டியல் -1819-1954
| இல. | பெயர் | தொடக்கம் | வரை |
| 01 | மேஜர் எஸ். ஹெக்ஸ்ட் | 1819 | |
| 02 | கேப்டன் எப். அர்வின் | 1820 | |
| 03 | லெப்டினன்ட் கர்னல் ஜே.எம். ஸ்டாக்ஸ்பால் | 1821 | |
| 04 | லெப்டினன்ட். ருக்னல் ஹு ஸ்டாக்பால் | 1822 | 1825 |
| 05 | கேப்டன். பி. டிரைடல் | 1826 | 1829 |
| 06 | கேப்டன் ஜே. ஃபோர்ப்ஸ் | 1829 | 1837 |
| 07 | ஆர். வால்ஸ் | 1838 | |
| 08 | 1839 | 1848 | |
| 09 | எச். டெம்ப்ளர் | 1848 | 1851 |
| 10 | எஃப். லேயார்ட் | 1852 | 1860 |
| 11 | ஏ.ஓ. ப்ரோட் | 1861 | 1864 |
| 12 | டபிள்யூ.இ.டி. ஷார்ப் | 1865 | |
| 13 | டபிள்யூ.டபிள்யூ. ஹியும் | 1866 | |
| 14 | ஆர்.சி. பாஉல் | 1867 | |
| 15 | டபிள்யூ.இ.டி. ஷார்ப் | 1868 | |
| 16 | ஜி.எஸ். வில்லியம்ஸ் | 1869 | 1870 |
| 17 | ஆர். மேயி | 1871 | 1873 |
| 18 | ஜி.எஸ். வில்லியம்ஸ் | 1874 | 1877 |
| 19 | எச். எல். மொய்சி | 1878 | 1886 |
| 20 | எஸ்.எம். பரோஸ் | 1887 | 1889 |
| 21 | ஜி.எஸ். சாக்ஸ்டன் | 1890 | 1898 |
| 22 | எச்.எஸ். போக்ஸ் | 1899 | |
| 23 | இ.பி. அலெக்சாண்டர் | 1900 | 1902 |
| 24 | சி.ஆர். கம்ப்லேண்ட் | 1903 | |
| 25 | ஆர்.பி. ஹெலிங்ஸ் | 1904 | 1905 |
| 26 | ஆர்.ஏ.ஜி. ஃபெசின் | 1906 | |
| 27 | எஃப். பாவுஸ் | 1907 | |
| 28 | ஆர்.ஏ.ஜி. ஃபெஸ்டின் | 1908 | |
| 29 | எப்.ஜீ. டிரல் | 1909 | 1911 |
| 30 | டபிள்யூ. ஜீ. சதர்ன் | 1912 | 1913 |
| 31 | டபிள்யூ.ஜே.எல். ரோஜர்சன் | 1914 | |
| 32 | ஏ.டபிள்யூ. சேமூர் | 1915 | |
| 33 | எச்.டபிள்யூ. குவோட்ரின்டன் | 1916 | |
| 34 | இ.டி. மிலிண்டன் | 1917 | 1919 |
| 35 | சி. ஹாரிசன் ஜோன்ஸ் | 1920 | 1923 |
| 36 | டீ.ஏ. கொட்சன் | 1924 | |
| 37 | டபிள்யூ.ஈ. ஹோபிடே | 1925 | |
| 38 | டபிள்யூ.ஜே.எல். ரோஜர்சன் | 1926 | 1928 |
| 39 | சி.இ. ஜான்ஸ் | 1929 | 1931 |
| 40 | டபிள்யூ.ஓ. ஸ்டீவன்ஸ் | 1932 | 1933 |
| 41 | ஆர்.ஒய். டேனியல் | 1934 | 1936 |
| 42 | கார்ல் ஈ. அர்ன்ட் | 1937 | |
| 43 | ஆர்.எச்.டி. மாண்டர்ஸ் | 1938 | 1944 |
| 44 | டபிள்யூ. ஹோம்ஸ் | 1945 | |
| 45 | சீ. சிற்றம்பலம் | 1946 | |
| 46 | வீ.எல். வீரசிங்க | 1947 | 1948 |
| 47 | ஆர் டீ. பவுலஸ் | 1949 | |
| 48 | ஏ.ஆர். இரத்னவேல் | 1950 | 1952 |
| 49 | ஏ.எல். பெரேரா | 1953 |







