Uncategorised

வீசா அனுமதிப் பத்திர சேவை

கடமை நேரங்கள் யாவை?

  • எல்லாவித விண்ணப்பங்களையும் ஒப்படைக்க வேண்டிய நேரம்: மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 1.30 மணி வரை.
  • ஒப்படைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கான வீசாக்களைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தர வேண்டிய நேரம்: மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 12.00 மணி வரை.
    வார இறுதி நாட்களிலும், அரசாங்க விடுமுறை நாட்களிலும் அலுவலகம் மூடப்பட்டிருக்கும்.

இலங்கை வீசா அனுமதிப் பத்திரம் என்றால் என்ன?

இலங்கை வீசா அனுமதிப் பத்திரம் என்பது இலங்கையர் அல்லாதோருக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க வசதியளிக்கவும், அவர்கள் தங்கி இருக்கும் காலப் பகுதியை மட்டுப்படுத்தவும், அவ்வாறு தங்கி இருப்பதற்கான நிபந்தனைகளை அறிவிக்கவும், வெளிநாட்டுக் கடவுச்சீட்டிலோ அதனையொத்த ஆவணத்திலோ இருக்கின்ற புறக்குறிப்பாகும்.

இலங்கை வீசா அனுமதிப் பத்திர வகைகள் யாவை?

இலங்கைக்குள் பிரவேசிக்கவும் அத்துடன் / அல்லது அங்கு தங்கி இருக்கவும் அனுமதி வழங்கும் நான்கு வகையான வீசாக்கள் உள்ளன.

வருகைதரல் வீசா

வருகைதரல் வீசா என்பது வெளிநாட்டவரொருவருக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க இலங்கை அரசாங்கத்தின் விருப்பத்தை தெரிவிக்கின்ற அனுமதிப் பத்திரம் ஆகும். இந்த வீசா அனுமதிப் பத்திரத்தில் நாட்டுக்குள் தங்கியிருக்கக்கூடிய காலப் பகுதியும் நிபந்தனைகளும் அடங்கி இருக்கும்.

சுற்றுலா வருகைதரல் வீசா அனுமதிப் பத்திரம்

கண்கவர் இடங்களைப் பார்வையிடல், உல்லாசப் பயணங்கள், ஓய்வு நேரத்தைச் சுகமாகக் கழித்தல், உறவினர்களைச் சந்தித்தல் அல்லது யோகா பயிற்சி போன்றவற்றுக்காக குறுகிய காலப்பகுதிக்குள் இலங்கையில் தங்கியிருக்க கருதுகின்ற நல்லெண்ணம் பொருந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலா வருகைதரல் வீசா அனுமதிப் பத்திரம் விநியோகிக்கப்படும்.

வதிவிட வீசா அனுமதிப் பத்திரம்

வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் என்பது விசேட கருமங்களுக்காக வதிவிட வசதிகளைப் பெற்றுக்கொள்ள விரும்புகின்ற இலங்கையரல்லாத ஆட்களுக்கு விநியோகிக்கப்படுகின்ற அனுமதிப் பத்திரமாகும். வதியும் வீசா அனுமதிப் பத்திர வகையில் எட்டு உப வகைகள் உள்ளன.

நான் எத்தகைய வதிவிட வீசா வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்திற்கு தகைமையுடயவன்?

1. தொழில்வாய்ப்பு வகையினம்

  • இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் அமுலாகி வருகின்ற கருத்திட்டங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டவர்களும் அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட கருத்திட்டங்களில் சேவையாற்ற அவசியமான தொழில்வாண்மையாளர்களும்.
  • வங்கிகளில் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களும் அவர்களில் தங்கிவாழ்வோரும்.
  • தொண்டர்கள்
  • அரச சார்பற்ற நிறுவனங்களுடன் தொடர்புடைய ஆட்கள்
  • இலங்கைத் தூதரகங்களின் கீழ் உள்ள நிறுவனங்களிலும் அமைப்பாண்மைகளிலும் சேவையில் ஈடுபட்டுள்ள ஆட்கள்.
  • தனியார் கம்பனியொன்றில் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களும் அவர்களில் தங்கிவாழ்வோரும்.

2. முதலீட்டு வகையினம்

  • இலங்கையில் நிதி முதலீட்டினை செய்ய விரும்புகின்றவர்கள்.
  • இலங்கையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள்.

3. சமயம்சார் வகையினம்

  • துறவிகள் (மதகுருமார்கள்)

4. மாணவர் வகையினம்

  • பல்கலைக்கழக மாணவர்கள்
  • அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் மாணவர்கள்
  • பிற நிறுவனங்கள்

5. 1954 இந்திய - இலங்கை உடன்படிக்கையில் அடங்கும் பதிவு செய்த இந்தியர்கள்

6. முன்னாள் இலங்கையர்களும் அவர்களில் தங்கிவாழ்வோரும்

7. இலங்கையரொருவரின் குடும்ப அங்கத்தவர்கள்

  • வாழ்க்கைத்துணை
  • வெளிநாட்டு பிரசாவுரிமை கொண்ட சிறுவர்கள்

8. ராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ வீசா அனுமதிப் பத்திரங்கள்

"எனது கனவு இல்லம்" வீசா அனுமதிப்பத்திர நிகழ்ச்சித்திட்டம்

வதியும் விருந்தினர் வீசா அனுமதிப் பத்திர நிகழ்ச்சித்திட்டம்


இடைத்தங்கல் வீசா

இடைத்தங்கல் வீசா என்பது வெளிநாட்டவரொருவர் பிறிதொரு பயண முடிவிடத்தை நோக்கிச் செல்கின்ற வேளையில் தற்காலிகமாக தங்கிச் செல்லும் பொருட்டு இலங்கையில் பிரவேசிக்க அவருக்கு வாய்ப்பு வழங்கும் அனுமதிப் பத்திரமாகும்.

கைமாறு கருதாத வீசா (Gratis Visa)

ராஜதந்திர அல்லது உத்தியோகபூர்வ புறக்குறிப்பினைக் கொண்ட கடவுச்சீட்டினைக் கொண்டுள்ள ஒருவருக்கு வீசா அனுமதி பெற எவ்விதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

வீசா கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுவோர் யாவர்?

  • இலங்கை இரட்டைப் பிரசாவுரிமையை வைத்திருப்பவர்கள்.
  • பிரசாவுரிமைச் சட்டத்தின் 5 (2) பிரிவின் கீழ் பதிவு செய்துள்ள பிறப்பினைக் கொண்ட சிறுவர்கள்.
  • இலங்கையில் பிறந்த 21 வயதிற்குக் குறைந்த இலங்கையரின் பிள்ளைகள்.

மேற்படி தொடர்களுக்காக ஒவ்வொரு வகையினத்திற்காகவும் தயவு செய்து இங்கே சுடக்குக.

இலங்கை வீசா அனுமதிப் பத்திரத்திற்கான பொதுவான தகைமைகள் யாவை?

இலங்கை குடிவரவு - குடியகல்வு அதிகாரிகள் கீழே குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் உங்களுக்கு வீசா அனுமதிப்பத்திரத்தை விநியோகிப்பர்.

  1. நீங்கள் இலங்கைக்குள் பிரவேசிக்கப் பொருத்தமானவரென இலங்கை குடிவரவு - குடியகல்வு அதிகாரிகள் திருப்தியுறும் வேளையில்.
  2. இலங்கைக்குள் பிரவேசிக்கும் நோக்கத்திற்கு இலங்கை குடிவரவு - குடியகல்வு அதிகாரிகள் அனுமதி வழங்கும் வேளையில்.
  3. நீங்கள் இலங்கைக்கு வருகைதரும் தினத்தில் இருந்து குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் கடவுச்சீட்டொன்றினை வைத்திருக்கும் வேளையில்.
  4. இலங்கையில் நீங்கள் கழிக்கும் காலப் பகுதிக்குள் உங்களின் பராமரிப்புக்காகவும், உங்களின் வெளிநாட்டுக் கடவுச்சீட்டினை விநியோகித்த நாட்டுக்கு திரும்பிச் செல்லவும் போதுமானளவு நிதியம் உங்களிடம் இருப்பதாக குடிவரவு - குடியகல்வு அதிகாரிகள் திருப்தியடையும் வேளையில்.
  5. நீங்கள் ஒரு நாட்டுக்கான வருகைதரல் வீசா அனுமதிப் பத்திரம் உடையவரெனில் நீங்கள் வசிக்கும் நாட்டுக்கோ அல்லது நீங்கள் கருதியுள்ள அடுத்த பயண முடிவிட நாட்டுக்கான எழுத்திலான அனுமதி (டிக்கெற்) உங்களிடம் இருக்குமிடத்து.

வருகைதரல் வீசா அனுமதிப் பத்திரமொன்றின் பொதுவான நிபந்தனைகள் யாவை?

  • இலங்கையில் நீங்கள் தங்கியிருக்கும் காலப் பகுதியில் வீசா அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள விடயத்தைத் தவிர கொடுப்பனவுடனான அல்லது கொடுப்பனவற்ற எந்தவொரு தொழிலிலோ வியாபாரத்திலோ தொழில் முயற்சியிலோ ஈடுபடலாகாது.
  • வீசா அனுமதிப் பத்திரத்தில் குறிக்கப்பட்டுள்ள காலாவதியாகும் திகதிக்கு முன்னராக உங்களின் வீசா பயன்படுத்தப்படல் வேண்டும்.
  • உங்கள் வீசா அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலப் பகுதிக்குள் மாத்திரம் இலங்கைக்கு வருகைதர உங்களின் வீசா அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும்.
  • வீசா அனுமதிப் பத்திர நீடிப்புக்கான கோரிக்கைகள் அனைத்தும் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
கடவுச்சீட்டு பற்றிய பொதுவான தகவல்கள்


புதிய கடவுச்சீட்டு விண்ணப்ப அனுமதி நடைமுறை
 

2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது டிஜிட்டல் புகைப்படத்தையும் விரலடையாளத்தையும் திணைக்களத்திற்கு சமர்ப்பித்தல் வேண்டும். டிஜிட்டல் பகைப்படமானது நாடு பூராகவும் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையங்களினூடாக அல்லது குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை காரியாலயத்தில் அல்லது குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய காரியாலயங்களில் அமைந்துள்ள புகைப்பட நிலையங்களினூடாக சமாப்பிக்கப்படலாம். அச்சிடப்பட்ட புகைப்படப் பிரதிகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விரலடையாளங்கள் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை காரியாலயம் அல்லது பிராந்திய காரியாலயங்களில் சேகரிக்கப்படுவதுடன் இதற்காக விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட ரீதியில் திணைக்களத்திற்கு சமூகமளித்தல் வேண்டும்.


முக்கிய விடயங்கள்

  1. எல்லா கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களும் வயது பாகுபாடு இன்றி கடவுச்சீட்டு விண்ணப்பம் K 35A இனை சமர்ப்பித்தல் வேண்டும். (அறிவுறுத்தல்)
  2. குழந்தைகள் உட்பட எல்லா கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களும் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையங்களினூடாக தமது டிஜிட்டல் புகைப்படத்தினை சமர்ப்பித்தல் வேண்டும்.
  3. 16 வயதிற்கு மேற்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களினதும் விரலடையாளங்கள் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை காரியாலயம் அல்லது இலங்கையிலுள்ள 3 பிராந்திய காரியாலயங்களில் சேகரிக்கப்படும்.
  4. வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரங்களினூடாக விண்ணப்பிக்கும் கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் தமது விரலடையாளத்தினையும் டிஜிட்டல் புகைப்படத்தினையும் சமர்ப்பிக்காது தற்போதுள்ள முறையிலேயே விண்ணப்பங்களினை சமர்ப்பிக்கலாம்.
  5. பெற்றோரின் கடவுச்சீட்டுக்களில் குழந்தைகளை உள்ளடக்கும் நடைமுறைகள் இனிமேல் இடம்பெற மாட்டாது என்பதுடன் அவர்களுக்கு தனியான கடவுச்சீட்டுக்களே விநியோகிக்கப்படும்.
  6. 60 வயதிற்கு குறைந்த வயதுடைய விண்ணப்பதாரர்களுக்கு அவசர சான்றிதழ்கள் (EC) வழங்கப்படமாட்டாது.

டிஜிட்டல் புகைப்படம் எவ்வாறு திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படலாம்?

  1. தங்களுக்கு விருப்பமான அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையமொன்றிற்கு வருகை தாருங்கள்.
  2. புகைப்பட நிலையத்தினர் தங்களது புகைப்படத்தினை இணைய வாயிலாக எமது கணனித் தொகுதிக்கு அனுப்பி வைப்பதுடன் புகைப்பட நிலைய அறிவித்தல் குறிப்பினை தங்களுக்கு விநியோகிப்பர். அச்சிடப்பட்ட புகைப்பட பிரதிகள் கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கு அவசியமில்லை.
  3. புகைப்பட நிலைய அறிவித்தல் குறிப்பு தங்களது கடவுச்சீட்டு விண்ணப்பம் மற்றும் ஏனைய உதவி ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

மேலதிக தகவல்கள்: துரித இலக்கம் 1962 அல்லது தொலைபேசி இலக்கங்கள் 0115329200 / 0115329175

இலங்கைச் கடவுச்சீட்டொன்றைப் பெற எனக்கு உரிமை உண்டா?
நீங்கள் பரம்பரை வழியாகவோ பதிவு மூலகமாகவோ இலங்கைப் பிரசையெனில் நீங்கள் இலங்கைக் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும்.


கடவுச்சீட்டொன்றினை அவசரமாகப் பெற்றுக்கொள்ளல்
உங்களின் அவசரப் பயணங்களுக்கு கடவுச்சீட்டு அவசியமெனில் ஒரு நாள் சேவை ஊடாக அதற்காக விண்ணப்பிக்கலாம். குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்தில் இருந்து மாத்திரமே இச்சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும். (கடவுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ளலின் கீழ் பார்க்கவும்.கடவுச்சீட்டொன்றின் செல்லுபடியாகும் காலவரையறை
தற்போது விநியோகிக்கப்படுகின்ற (N) பிரிவைச் சேர்ந்த கடவுச்சீட்டுகள் வேறுவிதமாகக் காட்டப்பட்டிராவிட்டால் 10 வருடங்களுக்குச் செல்லுபடியாகும். அவசர சான்றிதழ் இரண்டு வருடங்களுக்குச் செல்லுபடியாவதுடன் மேலும் இரண்டு வருடங்களுக்கு அதனை நீடித்துக்கொள்ளலாம்.கடமை நேரங்கள் யாவை?

  • சாதாரண சேவை விண்ணப்பப் பத்திரங்கள் கிழமை நாட்களில் மு.ப. 8.00 மணி முதல் பி.ப. 1.30 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
  • அவசர அடிப்படையிலான விண்ணப்பப் பத்திரங்கள் - கிழமை நாட்களில் மு.ப. 7.00 மணி முதல் 1.30 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். வார இறுதியிலும் அரசாங்க விடுமுறை தினங்களிலும் அலுவலகம் மூடப்பட்டிருக்கும்.

கடவுச்சீட்டிற்காக விண்ணப்பிப்பது எப்படி?

பத்தரமுல்லை, “சுகுறுபாயா” கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கடவுச்சீட்டுப் பிரிவிடம் (01 ஆம் மாடி – சாதாரண சேவை/ 02 ஆம் மாடி – அவசர சேவை) கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஒப்படைக்கலாம். இங்கு இடஅமைவுப் படத்தைப் பார்க்க ஏற்புடைய பொத்தானை அழுத்துக.கடவுச்சீட்டு வகைகள் யாவை?

  1. அனைத்து நாடுகளுக்கும் செல்லுபடியாகும் கடவுச் சீட்டு
    • சாதாரண கடவுச்சீட்டு
    • இராஜதந்திர கடவுச்சீட்டு
    • உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு
  2. ஆசியாவினதும் மத்திய கிழக்கினதும் குறித்துரைத்த நாடுகளுக்கான செல்லுபடியாகும் கடவுச்சீட்டு.
  3. இந்தியாவுக்கும் நேபாளத்திற்குமான பெளத்த யாத்திரிக பயணங்களுக்கான அவசர சான்றிதழ்.
  4. வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களால் விநியோகிக்கப்படுகின்ற அடையாளச் சான்றிதழ் மற்றும் இயந்திரம் மூலமாக வாசிக்க முடியாத கடவுச்சீட்டு அவசர ஒருவழிப் பயணங்களுக்கானது.
கடவுச்சீட்டினை விநியோகித்தல்
  1. அனைத்து நாடுகளுக்கும் செல்லுபடியாகும் கடவுச் சீட்டு
  2. இந்தியாவுக்கும் நேபாளத்திற்குமான பௌத்த யாத்திரிக பயணங்களுக்கான அவசர சான்றிதழ்கள்.
  3. வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரங்களால் விநியோகிக்கப்படுகின்ற இயந்திரம் மூலமாக வாசிக்க முடியாத கடவுச்சீட்டுகளும் அடையாளச் சான்றிதழ்களும்.
  4. பராயமடையாதவர்களுக்கான இலங்கைச் கடவுச்சீட்டு.
  5. பெற்றோர்களின் கடவுச்சீட்டுகளில் பராயமடையாதவர்களை உள்ளடக்குதல்.
  6. இரட்டைப் பிரசாவுரிமை உடையவர்களுக்கான இலங்கை கடவுச்சீட்டு
  7. கடவுச்சீட்டு காணாமல் போயிருப்பின்

சாதாரண கடவுச்சீட்டு
அனைத்து நாடுகளுக்கும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு
பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?

  1. தற்போது உள்ள கடவுச்சீட்டு (விபரங்களுக்காக இங்கு கீழே பார்க்கவும்.)
  2. புகைப்பட ஸ்டுடியோ ரசீது.
  3. விண்ணப்பதாரியின் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி
  4. விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் மூலப்பிரதியும் நிழற்பிரதியும்.
  5. தேவைக்கேற்றவாறு விவாகச் சான்றிதழ் (விவாகத்தின் பின்னர் பாவிக்கப்படுகின்ற பெயரை உறுதிப்படுத்துவதற்காக)
  6. உங்களது தொழிலை அத்தாட்சிப்படுத்துவதற்கான தொழிற்றுறை சான்றிதழும், சேவையை அத்தாட்சிப்படுத்தக் கூடிய ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆவணமும் அவற்றின் நிழற் பிரதியுடன்

சங்கைக்குரிய பௌத்த பிக்குகள்:

  • பிக்கு சான்றிதழை (சாமனேர சான்றிதழ்) அல்லது பிக்கு பட்டமளிப்புச் சான்றிதழை (உபசம்பதா சான்றிதழ்) அதன் நிழற் பிரதியுடன் சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.

M அல்லது N பிரிவைச் சேந்த கடவுச்சீட்டொன்று ஏற்கெனவே உங்களிடம் இருப்பின் (கடவுச்சீட்டின் இலக்கம் M அல்லது N பிரிவின் எழுத்துடன் தொடங்குமாயின்) விண்ணப்பப் பத்திரத்துடன் அதனைச் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் பத்திரமொன்றைப் பெறுவதெப்படி?

  1. கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திலிருந்து.
  2. கண்டி, மாத்தறை, வவுனியா மற்றும் குருணாகல் பிராந்திய அலுவலகங்கள்.
  3. உங்கள் பிரதேசத்தின் பிரதேச செயலகத்திலிருந்து.
  4. வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் மூலமாக.
  5. அச்சிடப்பட்ட விண்ணப்பப் பத்திரங்களைப் பதிவிறக்கம் செய்ய இங்கே சுடக்குக.

விண்ணப்பப் பத்திரம் ஒப்படைக்கப்பட வேண்டிய இடம் யாது?

  1. கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடம்.
  2. கண்டி, மாத்தறை, வவுனியா மற்றும் குருணாகல் பிராந்திய அலுவலகங்கள்.
  3. வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்திடம்.


அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டினை வழங்க எவ்வளவு காலம் செல்லும்?
சாதாரண அடிப்படையில் - 14 வேலை நாட்கள்
அவசர அடிப்படையில் - அதே தினத்தில்அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டின் தயாரித்தல் கட்டணம் யாது?
சாதாரண அடிப்படையில் - இலங்கை ரூபா. 3500.00
அவசர அடிப்படையில் - இலங்கை ரூபா. 15000.00 


இராஜதந்திர கடவுச்சீட்டு

கடவுச்சீட்டில் சிறப்பாக குறிப்பிடப்பட்டிருந்தாலேயொழிய, இக்கடவுச்சீட்டு அனைத்து நாடுகளுக்கும் 10 வருடங்களுக்குச் செல்லுபடியாகும். மிகவும் முக்கியமான ஆட்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்களில் குறித்துரைக்கப்பட்ட பதவிகளை வகிப்பவர்களுக்காக இக்கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும்.
"தகைமைபெற்ற ஆட்களின் பெயர்ப் பட்டியலுக்கான சுற்றறிக்கையைப் பார்க்கவும்."விண்ணப்பப் பத்திரங்களை எங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம்?

  1. கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திலிருந்து.
  2. அச்சிடப்பட்ட விண்ணப்பப் பத்திரத்தை இங்கு பதிவிறக்கம் செய்க.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரங்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் யாவை?

  1. விண்ணப்பதாரியின் மிக அண்மையில் பெறப்பட்ட கடவுச்சீட்டு (தயவுசெய்து விபரங்களுக்காக கீழே பார்க்கவும்.)
  2. புகைப்பட ஸ்டுடியோ ரசீது.
  3. விண்ணப்பதாரியின் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி.
  4. விண்ணப்பதாரியின் தேசிய அழைடயாள அட்டையின் மூலப்பிரதியும் நிழற்பிரதியும்.
  5. விவாகச் சான்றிதழ் அவசியத்திற்கேற்ப. (விவாகத்திற்குப் பிந்திய பெயரை உறுதிப்படுத்துவதற்காக.)
  6. பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக பாராளுமன்றத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்ட கடிதம்.
    • வெளிநாட்டுப் பதவிகளுக்காக - வெளியுறவு அமைச்சின் கோரிக்கைக் கடிதம்.
    • ஏனைய ஆட்களுக்காக - வரிசை அமைச்சினால் வழங்கப்பட்ட கடிதம்.

M அல்லது N பிரிவைச் சேந்த கடவுச்சீட்டொன்று ஏற்கெனவே உங்களிடம் இருப்பின் (கடவுச்சீட்டின் இலக்கம் M அல்லது N பிரிவின் எழுத்துடன் தொடங்குமாயின்) விண்ணப்பப் பத்திரத்துடன் அதனைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இராஜதந்திர கடவுச்சீட்டுக்கான தயாரிப்புக் கட்டணம் யாது?

சாதாரண அடிப்படையில் - இலங்கை ரூபா. 3500.00

அவசர அடிப்படையில் - இலங்கை ரூபா. 15000.00 


உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு

உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்காக எவர் விண்ணப்பிக்கலாம்?

பின்வரும் பிரிவுகளைச் சேர்ந்த ஆட்களுக்காக உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும்,


விண்ணப்பப் பத்திரத்தை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்?

விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் யாவை?

  • தற்போது பாவிக்கும் கடவுச்சீட்டு (விபரங்களுக்காக இங்கு கீழே பார்க்கவும்.)
  • புகைப்பட ஸ்டுடியோ ரசீது
  • விண்ணப்பதாரியின் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி.
  • விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் மூலப்பிரதியும் நிழற்பிரதியும்.
  • அவசியத்திற்கேற்ப விவாகச் சான்றிதழ். (விவாகப் பெயரை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக)
  • மாகாண சபைகள், திணைக்களங்கள், வரிசை அமைச்சுக்களின் தலைமை அதிகாரியால் விநியோகிக்கப்பட்ட கோரிக்கைக் கடிதம்.

* M அல்லது N பிரிவைச் சேந்த கடவுச்சீட்டொன்றை ஏற்கெனவே நீங்கள் வைத்திருந்தால் (கடவுச்சீட்டின் இலக்கம் M அல்லது N பிரிவின் எழுத்துடன் ஆரம்பிக்குமாயின்) விண்ணப்பப் பத்திரத்துடன் அதனைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரத்தை எங்கு சமர்ப்பிக்க வேண்டும்?

கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு. 

உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்கான தயாரித்தல் கட்டணம் யாது?
சாதாரண அடிப்படையில் : இலங்கை ரூபா. 3500.00
அவசர அடிப்படையில் : இலங்கை ரூபா. 15000.00 


அவசர சான்றிதழ் (EC)

அவசர சான்றிதழ் என்றால் என்ன?
இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் பயணஞ் செய்கின்ற இலங்கை பௌத்த யாத்திரிகர்களுக்காக மாத்திரம் விநியோகிக்கப்படுகின்ற பிரயாண ஆவணமே அவசர சான்றிதழ் ஆகும். இந்த ஆவணம் 2 வருடங்களுக்காக மாத்திரம் செல்லுபடியாவதோடு, அதனை மேலும் 2 வருடங்களுக்கு விண்ணப்பத்தை சமர்ப்பித்து நீடித்துக்கொள்ள முடியும். மேலதிக விபரங்களுக்காக தயவு செய்து கடவுச்சீட்டுப் புதுப்பித்தல் செயற்பாட்டினைப் பார்க்கவும்.



பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரங்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் யாவை?

  • மிக அண்மையில் பெறப்பட்ட விண்ணப்பதாரியின் கடவுச்சீட்டு (மேலதிக விபரங்களுக்காக இங்கு கீழே பார்க்கவும்.)
  • விண்ணப்பதாரியின் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி.
  • விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் மூலப்பிரதியும் நிழற்பிரதியும்.

என்னிடம் பிறப்புச் சான்றிதழோ தேசிய அடையாள அட்டையோ இல்லாவிட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?
பின்வரும் ஆவணங்களில் ஒன்றையோ பலவற்றையோ நீங்கள் சமர்ப்பிக்கலாம். அதாவது,

  • விண்ணப்பதாரியின் சாரதி அனுமதிப் பத்திரம்.
  • விண்ணப்பதாரியின் முதியோர் அடையாளச் சான்றிதழ்.
  • விண்ணப்பதாரியின் ஓய்வூதிய அடையாளச் சான்றிதழ்.
  • தேடல் பெறுபேறு; பதிவாளர் நாயகத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்ட தேடல் பெறுபேற்று ஆவணமும் விண்ணப்பதாரியின் பிள்ளையின் பிறப்புச் சான்றிதழும்.
  • ஊக வயதுச் சான்றிதழ். (பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட)

ஏற்கெனவே உங்களிடம் M அல்லது N பிரிவைச் சேந்த செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது அவசர சான்றிதழ் இருப்பின் (கடவுச்சீட்டின் இலக்கம் M அல்லது N அல்லது EC எழுத்துக்களில் தொடங்குமாயின்) விண்ணப்பப் பத்திரத்துடன் அதனை இணைத்தல் வேண்டும்.விண்ணப்பப் பத்திரத்தை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்?

  • கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.
  • கண்டி, மாத்தறை, வவுனியா மற்றும் குருணாகல் பிராந்திய அலுவலகங்கள்.
  • உங்கள் பிரதேசத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் மூலமாக.
  • வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களிலிருந்து.
  • அச்சிடப்பட்ட விண்ணப்பப் பத்திரத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்க.

பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரத்தை எங்கு சமர்ப்பிக்க வேண்டும்?

  • கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்தில்.
  • அநுராதபுரம், மாத்தறை, கண்டி பிராந்திய அலுவலகங்களில்.

அவசர சான்றிதழை வழங்க எவ்வளவு காலம் செல்லும்?
சாதாரண அடிப்படையில் - 14 வேலை நாட்கள்
அவசர அடிப்படையில் - இயலாது

அவசர சான்றிதழுக்கான தயாரித்தல் கட்டணம் யாது?
சாதாரண அடிப்படையில் - இலங்கை ரூபா. 500.00 (அவசர அடிப்படையில் - ஏற்புடையதன்று) 


இயந்திரத்தில் வாசிக்க இயலாத கடவுச்சீட்டு மற்றும் தற்காலிக பயண ஆவணங்கள்

இந்த ஆவணங்கள் யாவை?
கடவுச் சீட்டினைத் தொலைத்த அல்லது களவாடப்பட்ட அல்லது வெளிநாட்டில் இருக்கும் போது காலாவதியாகியுள்ள வேளையில் இலங்கையருக்கு விநியோகிக்கப்படும் அனுமதிப் பத்திரமாகும்.இந்த ஆவணங்களை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்?
வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்திடமிருந்து இந்த ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.


எப்போது விண்ணப்பிக்கலாம்?
நீங்கள் மீண்டும் சிலகாலத்திற்கு இலங்கைக்கு திரும்பிவர எதிர்பார்ப்பீர்களாயின் நீங்கள் இயந்திரத்தால் வாசிக்க முடியாத கடவுச்சீட்டிற்கு அல்லது தற்காலிக பயண, ஆவணத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

செல்லுபடியாகும் காலப்பகுதி யாது?

இயந்திரத்தால் வாசிக்க முடியாத கடவுச்சீட்டல்லாத தற்காலிக பயண ஆவணம் இலங்கைக்கு ஒரு தடவை பயணஞ் செய்ய மாத்திரமே செல்லுபடியாகும்.

விண்ணப்பப் பத்திரத்தை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்?

விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு சமர்ப்பிப்பது?
வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்திடம் ஒப்படைப்பதன் மூலமாக.அடையாளச் சான்றிதழ்
அடையாளச் சான்றிதழ் என்றால் என்ன?
வெளிநாட்டவரொருவரின் கடவுச்சீட்டு தொலைந்து போயுள்ளவிடத்து அல்லது இலங்கையில் இருக்கும் போது காலாவதியானால் வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் அனுமதிப் பத்திரமாகும்.அடையாளச் சான்றிதழைப் பெறுவதெப்படி?
கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்துடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு ரூ. 3500/- ஐ செலுத்தி அன்றைய தினத்திலேயே அடையாளச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம். 
பராயமடையாத விண்ணப்பதாரிகள் / மகவேற்பு விண்ணப்பதாரர்களுக்கான இலங்கை கடவுச்சீட்டு (3 வருடங்கள் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு)

பராயமடையாதோர் என்றால் யார்?
16 வயதுக்கு குறைந்த எந்த ஒருவரும் இதன் பொருட்டு பராயமடையாதோராகக் கருதப்படுவர்.இலங்கை கடவுச்சீட்டினைப் பெறுவதற்காக பராயமடையாத ஒருவர் விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பப் பத்திரத்தை ஒப்படைக்கும் பொருட்டு விண்ணப்பப் பத்திரங்கள் ஏற்கப்படுகின்ற அலுவலகத்திற்கு விண்ணப்பதாரி வரும்போது தமது தாயும், தந்தையும் அல்லது சட்டரீதியான பாதுகாவலருடன் வருகைதரல் வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலரது விருப்பத்தைத் தெரிவிக்கும் கடிதமொன்று விண்ணப்பப் பத்திரத்துடன் இணைக்கப்படல் வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் யாவை?

  • விண்ணப்பதாரியின் பிறப்புச் சான்றிதழ்.
  • புகைப்பட ஸ்டுடியோ ரசீது
  • பெற்றோரது கடவுச்சீட்டு (தரவுப் பக்கத்தினதும் பிள்ளைகளின் விபரங்கள் அடங்கிய பக்கத்தினதும் நிழற்பிரதிகளுடன்).
  • பெற்றோருக்கு கடவுச்சீட்டு இல்லாவிடின் சத்தியக் கடதாசியுடன் தேசிய அடையாள அட்டை சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
  • பெற்றோரின் விருப்பத்தைத் தெரிவிக்கும் கடிதம் சகிதம் கட்டாயமாக பெற்றோர் அல்லது சட்ட ரீதியான பாதுகாவலர் சமுகமளித்தல் வேண்டும்.

மகவேற்புப் பிள்ளைக்காக கடவுச்சீட்டினைப் பெற விண்ணப்பிப்பதாயின் கீழ்க்காணும் மேலதிக ஆவணங்கள் அவசியமாகும்.


மகவேற்புச் சான்றிதழ்.
அதற்கான நீதிமன்றக் கட்டளை.
நன்னடத்தை, சிறுவர் பாதுகாவல் ஆணையாளரது கடிதம்.

முக்கிய குறிப்பு: ஆவணங்களின் நிலற் பிரதிகள் சகிதம் மூலப் பிரதிகளைச் சமர்ப்பித்தல் வேண்டும். கீழ்க் காட்டப்பட்ட முக்கிய சந்தர்ப்பங்களில் கீழ்க் காட்டப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்தல் வேண்டும்.பிள்ளை/ பிள்ளைகள் இலங்கைக்கு வெளியே பிறந்திருப்பின், அந்தந்த பிள்ளைக்காக கொன்சியுலர் அலுவலகத்தினால் விநியோகிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழும், குடியுரிமையைப் பதிவு செய்த சான்றிதழும்.விண்ணப்பதாரியின் (பிள்ளையின்) பெற்றோர் செல்லுபடியான இலங்கைக் கடவுச்சீட்டை/ கடவுச்சீட்டுகளைக் கொண்டில்லையெனில், அதனை உறுதிப்படுத்துவதற்கான சத்தியக் கடதாசியும், பெற்றோரின் தேசிய அடையாள அட்டையும்.

விண்ணப்பதாரியின் (பிள்ளையின்) பெற்றோர் காலஞ் சென்றிருப்பின் அவர்களின் இறப்புச் சான்றிதழ்கள், சட்ட ரீதியான பாதுகாவலரை அடையாளப்படுத்துவதற்கான ஆவணம், சட்ட ரீதியான பாதுகாவலரின் விருப்பத்தைத் தெரிவிக்கும் கடிதம், பிரதேச செயலாளரினால் மேலொப்பமிடப்பட்டு விநியோகிக்கப்பட்ட கிராம உத்தியோகத்தரின் அறிக்கை.விண்ணப்பதாரியின் (பிள்ளையின்) தாய் அல்லது தந்தை அல்லது இருவரும் வெளிநாட்டில் இருப்பின் குறித்த வெளிநாட்டில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பெற்றோரின் கடவுச்சீட்டின்/ கடவுச்சீட்டுகளின் நிழற் பிரதிகளும், விருப்பத்தைத் தெரிவிக்கும் கடிதமும்.

விண்ணப்பதாரியின் (பிள்ளையின்) பெற்றோர் வெளிநாட்டில் இருப்பின் பெற்றோரால் சட்டரீதியான பாதுகாவலருக்கு விநியோகிக்கப்பட்ட அதிகாரமளித்தல் கடிதம்.விண்ணப்பதாரியின் (பிள்ளையின்) பெற்றோர் விவாகரத்துச் செய்திருப்பின், விவாகரத்துச் சான்றிதழும், பிள்ளையை தமது காப்பில் வைத்திருப்பதற்கான நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவும்.விண்ணப்பதாரி (பிள்ளை) பெற்றோரினால் கைவிடப்பட்ட பிள்ளையாயின், பொலிஸ் அறிக்கையின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதியும், அதனை உறுதிப்படுத்தி கிராம உத்தியோகத்தரினால் விநியோகிக்கப்பட்டு பிரதேச செயலாளரினால் மேலொப்பமிடப்பட்ட கடிதமும்.​

அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டினை தயாரிப்பதற்கான கட்டணம் யாது (16 வயதிற்கு கீழ்)?
3 வருட செல்லுபடிக் காலம்
சாதாரண சேவை -  LKR. 2500.00
ஒரு நாள் சேவை - LKR.7500.0010 வருட செல்லுபடிக் காலம்
சாதாரண சேவை -  LKR. 3500.00
ஒரு நாள் சேவை - LKR.15000.00

கடவுச்சீட்டில் பிள்ளைகளைச் சேர்த்தல்

 

பிள்ளைகள் என்றால் யார் ?

16 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் பிள்ளைகள் எனக் கருதப்படும்.

பெற்றோரின் கடவுச்சீட்டில் பிள்ளைகளின் பெயரை சேர்க்க முடியுமா ?

முடியாது. பிள்ளைகளுக்காக தனியான கடவுச்சீடுகளை பெற்றுக் கொள்ள வேன்டும்.


இரட்டைப் பிரசாவுரிமை கொண்டுள்ளவர்களுக்கான இலங்கைச் கடவுச்சீட்டு
இலங்கையிலும் வேறொரு நாட்டிலும் பிரசாவுரிமை பெற்ற ஒருவர் கீழ்க்காணும் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் இலங்கை கடவுச்சீட்டொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.
(அச்சிடப்பட்ட விண்ணப்பப் பத்ததிரத்தை பதிவிறக்கம் செய்து கொள்க.)

  • பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரம்.
  • புகைப்பட ஸ்டுடியோ ரசீது
  • இரட்டைப் பிரசாவுரிமைச் சான்றிதழும் அதன் நிழற் பிரதியும். (1948 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க திருத்தப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டத்தின் 19(2) ஆம் பிரிவின் கீழ் இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுக் கொண்ட ஒருவராக இருப்பின், இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுக் கொண்டதன் பின் புதிதாக தேசிய அட்டையொன்றைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்)
  • குடியுரிமை பெற்றுக் கொள்ளப்பட்ட மற்றைய நாட்டின் கடவுச்சீட்டும், இலங்கைக் கடவுச்சீட்டொன்று இருப்பின் அக் கடவுச்சீட்டும் (வாழ்க்கைத் தரவு விபரங்கள் அடங்கிய பக்கங்களின் நிழற் பிரதிகளுடன்)
  • தேசிய அடையாள அட்டையும் அதன் நிழற் பிரதியும்.
  • பிறப்புச் சான்றிதழும் அதன் நிழற் பிரதியும்.

 

கடவுச்சீட்டு காணாமல் போயிருக்கும் சந்தர்ப்பத்தில் கீழ்க் காட்டப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்தல் வேண்டும்.

  • கடவுச்சீட்டு காணாமல் போனமை பற்றி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் மூலப்பிரதி.
  • கடவுச்சீட்டு வெளிநாடொன்றில் காணாமல் போயிருப்பின், அந் நாட்டில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தின் மூலம், இலங்கைக்கு வருவதற்காக விநியோகிக்கப்பட்ட தற்காலிக பயண ஆவணம் (NMRP) அதன் நிழற் பிரதியுடன்.
  • கடவுச்சீட்டிற்கான கட்டணத்திற்கு மேலதிகமாக தண்டப் பணமாக  ரூ. 11,500/-. (காணாமல் போன கடவுச்சீட்டின் உரிய செல்லுபடிக் காலம் கடந்தில்லாதிருப்பின் மட்டுமே இத் தண்டப் பணம் அறவிடப்படுகின்றது).

 


விசேட அறிவித்தல்: மேற்படி ஆவணங்களின் நிழற்பிரதிகளுடன் மூலப்பிரதிகளை சமர்ப்பித்தல் வேண்டும்.

குடியுரிமை பெற்றுக் கொள்ளப்பட்ட மற்றைய நாட்டின் கடவுச்சீட்டும், இலங்கைக் கடவுச்சீட்டொன்று இருப்பின் அக் கடவுச்சீட்டும் (வாழ்க்கைத் தரவு விபரங்கள் அடங்கிய பக்கங்களின் நிழற் பிரதிகளுடன்)

 

வெளிநாட்டு விண்ணப்பப் பத்திரங்கள்

வெளிநாட்டுத் தூதரகக் கிளை

வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கான அறிவுறுத்தல்கள்

இலங்கைப் பிரசாவுரிமையை கொண்டுள்ள ஒருவர் வெளிநாடொன்றில் இருக்கும் போது புதிய கடவுச்சீட்டொன்றினைப் பெறவோ / கடவுச்சீட்டினைப் புதுப்பித்துக்கொள்ளவோ அந்நாட்டின் தூதகரத்தினூடாக அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் இலங்கைத் தூதரகமொன்று இல்லாவிடின் மிகவும் அருகில் உள்ள நாட்டில் அமைந்துல்ல இலங்கைத் தூதரகத்தினூடாகவேனும் விண்ணப்பிக்கலாம். குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத் தலைமையகத்தின் வெளிநாட்டுத் தூதரக கிளையினால் இவ்விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும்.

வெளிநாட்டுத் தூதரகங்கள் ஊடாக கடவுச்சீட்டுகளுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளுக்கான அறிவுறுத்தல்கள்

1. இலங்கை வெளிநாட்டுத் தூதரங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்:

(அ)  மிகச் சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட கடவுச்சீட்டு விண்ணப்பப்படிவத்தை (படிவம் K 35 A), மற்றைய அத்தாட்சிப்படுத்துவதற்குத் தேவையான ஆவணங்களுடன் இலங்கை வெளி நாட்டுத் தூதரகத்தில்/  கொன்சியுலர் காரியாலயத்தில் ஒப்படைத்தல் வேண்டும்.

(ஆ) விண்ணப்பதாரியின் பிரகடனம் உள்ளடக்கப்பட்டு கடவுச்சீட்டு விண்ணப்பப்படிவம் (படிவம் K 35 A) திருத்தப்பட்டிருப்பதுடன், இவ் விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து, விண்ணப்பதாரி  கையொப்பமிட்டு தூதரக உத்தியோகத்தரிடம் ஒப்படைத்தல் வேண்டும். விண்ணப்பதாரியின் பிரகடனம் அடங்கிய பகுதியில் விண்ணப்பதாரியின் கையொப்பம் இன்றி எந்தவொரு விண்ணப்பமும் ஏற்றுக்  கொள்ளப்பட மாட்டாது.

(இ)  கடைப்பிடிக்க வேண்டிய/ கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்களைத் தெளிவூட்டும் விசேட அறிவுறுத்தல் குறிப்பை, கடவுச்சீட்டு விண்ணப்பப்படிவத்தை விநியோகிக்கும் போதே ஒவ்வொரு  விண்ணப்பதாரிக்கும் விநியோகித்தல் வேண்டும்.

(ஈ) அச்சிடப்பட்ட கடவுச்சீட்டு விண்ணப்பப்படிவங்களை (படிவம் K 35 A), அந்தந்த வெளிநாட்டுத் தூதரகங்கள்/ கொன்சியுலர் காரியாலயங்கள் ஊடாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், இத்  திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, தொடரறா முறை மூலமாகவும் இவ் விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2. 2018.01.01 ஆம் திகதி தொடக்கம், வெளிநாட்டுத் தூதரங்களூடாக விண்ணப்பித்து புதிய கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொண்ட விண்ணப்பதாரிகள், விமான நிலையங்களூடாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்:

(அ)  பயணிகள் குடிவரவு கருமபீடத்திற்கு அறிவிப்புச் செய்தல் வேண்டும்.

அல்லது

பிரதான குடிவரவு உத்தியோகத்தரிடம் அவர்கள் நேரடியாக அறிவிப்புச் செய்தல் வேண்டும்.

(ஆ) இதன் போது தனியான குறிப்பிலக்கமொன்றுடன் கூடியதாக, உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் படிவமொன்று (BDA Form) இரண்டு பிரதிகளைக் கொண்டதாக பயணிகளுக்கு விநியோகிக்கப்படும்.

(இ) விமானப் பயணிகள், உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் படிவத்தில் (BDA Form) இரு பிரதிகளைக் கொண்டதாக கையொப்பமிடுதல் வேண்டும்.

(ஈ)   அவற்றுள் ஒன்று, குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தில் உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் சமர்ப்பிப்பதற்காக அந் நபருக்கு விநியோகிக்கப்படும்.

(உ) மற்றைய பிரதி விமான நிலையத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கப்படும்.

விமான நிலையத்தில் உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான வசதிகள் காணப்படுவதில்லை என்பதால், அவர்கள் உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திற்கு வருகை தருதல் வேண்டும்.

உயிர்மானத் தரவுகளைப் (கைவிரல் அடையாளம்) பெற்றுக் கொடுப்பதற்காக திகதியொன்றையும், நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ளலாம். இங்கே கிளிக் செய்யவும்

3. இலங்கைக்குள் பிரவேசித்ததன் பின்னர் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு அல்லது திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களுள் ஒன்றிற்கு வருகை தந்து கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்:

2018 சனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வருமாறு, இலங்கை வெளிநாட்டுத் தூதரகங்கள் ஊடாக கடவுச்சீட்டிற்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் தொடர்பில், இலங்கை வெளிநாட்டுத் தூதரகங்கள் ஊடாக இலங்கைக் கடவுச்சீட்டிற்காக விண்ணப்பித்து, தமக்குரிய கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்டதன் பின், அவர்கள் இலங்கைக்கு வருகை தரும் முதற் சந்தர்ப்பத்திலேயே அவர்களது உயிர்மானத் தரவுகள் (கைவிரல் அடையாளம்) பெற்றுக் கொள்ளப்படும்.

(அ)  உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக, பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு அல்லது மாத்தறை, கண்டி, வவுனியா, குருணாகல்  ஆகிய இடங்களில் அமைந்துள்ள திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களுள் ஒன்றிற்கு வருகை தருதல் வேண்டும்.

(ஆ) இவ் அலுவலகங்ளில் வெளிநாட்டுத் தூதரகக் கிளையில் நிறுவப்பட்டுள்ள விசேட கருமபீடத்தில் கைவிரல் அடையாளம் பெற்றுக் கொள்ளப்படும்.

(இ)  உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொடுத்ததன் பின் உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறை பூர்த்தியடைந்ததை அத்தாட்சிப்படுத்தும் வகையில் தன்னியக்கமாக பிறப்பிக்கப்படுகின்ற  (System generated) பற்றுச்சீட்டொன்று திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும்.

(ஈ)   உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை மேற்கொண்டு முடிப்பதற்காக செலவாகும் காலம் சுமார் 30 - 45 நிமிடங்களாகும்.

(உ)  உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக்  கொடுத்த நபர்களுக்கு எந் நேரத்திலும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு ஏதுவாக எல்லைக் கட்டுப்பாட்டு முறைமை இற்றைப்படுத்தப்படும்.

(ஊ) மேற்சொன்ன பற்றுச்சீட்டை, இலங்கையிலிருந்து புறப்படும் வரை பாதுகாப்பாக தம்வசம் வைத்திருத்தல் வேண்டும்.

கடவுச்சீட்டு விண்ணப்ப படிவம் K 35 A ஐ தரவிறக்க


விசாரணைகள்
பிரதிக் கட்டுப்பாட்டாளர் - திருமதி கே.ஜீ.ஆர். பிரியதர்ஷனீ
தொலைபேசி : +94 11 5329230 நீடிப்பு : 9230
பக்ஸ் : +94 11 2879213
மின்னஞ்சல் : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

வெளிநாட்டுத் தூதரகப் பிரிவுக் கிளையினூடாக விண்ணப்பிக்கும் விதம்:
அவசியமான ஆவணங்கள்: கடவுச்சீட்டு விநியோகத்தைப் பார்க்கவும்.

விண்ணப்பப் பத்திரங்களுடன் தொடர்புடைய கட்டணங்கள் வெளிநாட்டுத் தூதரகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பின்வரும் சுற்றறிக்கைகளைப் பார்க்கவும்,
உதவிச் சேவைகள்
அத்தாட்சிப்படுத்தல் சேவைகள்
கடவுச்சீட்டின் பிரதான தரவுப் பக்கத்தின் பிரதியொன்றை அத்தாட்சிப்படுத்திக் கொள்வதெப்படி?

குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் வெளிநாட்டுத் தூதரகப் பிரிவினால் அத்தாட்சிப்படுத்தல் சேவைகள் வழங்கப்படுகின்றன.

இச்சேவையைப் பெற்றுக்கொள்ள அவசியமான ஆவணங்கள் யாவை?
மூலக் கடவுச்சீட்டும் அத்தாட்சிப்படுத்த அவசியமான பிரதிகளும்

இச்சேவையுடன் தொடர்புடைய கட்டணங்கள் யாவை?
பிரதி ஒன்றுக்கு இலங்கை ரூபா 300/- (அத்தாட்சிப்படுத்தக்கூடிய உச்சப் பிரதிகளின் எண்ணிக்கை 3)

மொழிபெயர்ப்புச் சேவை
கடவுச்சீட்டின் பிரதான தரவுகள் பக்கத்தினதும் சம்பந்தப்பட்ட புறக்குறிப்புக்களினதும் அராபிய மொழிபெயர்ப்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் வெளிநாட்டுத் தூதரகக் கிளையூடாக வழங்கப்படும்.

எனது கடவுச்சீட்டின் மொழிபெயர்ப்பினை பெற்றுக்கொள்வதற்கான நடைமுறை யாது?
விண்ணப்பதாரி தனது கடவுச்சீட்டுடன் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு நேரில் வருகைதரல் வேண்டும்.

இச்சேவையுடன் தொடர்புடைய கட்டணம் யாது?
ஒரு கடவுச்சீட்டின் மொழிபெயர்ப்புக்காக இலங்கை ரூபா 1,200/- அறவிடப்படும்.

 

கடவுச்சீட்டினைப் புதுப்பித்தல், காலத்தை நீடித்தல் அல்லது திருத்தம் செய்தல்
இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவரொருவர் தனது கடவுச்சீட்டில் அடங்கிய தரவுகளைத் திருத்தியமைக்கும் பொருட்டு விண்ணப்பித்து, திணைக்களத்தினால் அவ்விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அத்தகைய அனைத்து விதமான திருத்தங்கள், அவதானிப்புகள் மற்றும் மாற்றங்கள் பக்கங்களில் சேர்க்கப்படும்.

(பதிவிறக்கம் செய்த அச்சிடப்பட்ட விண்ணப்பப் பத்திரங்கள் மூலமாக)

ஏனைய மாற்றியமைத்தல்கள்
புதுப்பித்தல்கள், மாற்றியமைத்தல்கள் அல்லது செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கான விண்ணப்ப பத்திரங்களை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்?

புதுப்பித்தல்கள், மாற்றியமைத்தல்கள் அல்லது காலத்தை நீடித்துக்கொள்வதற்கான விண்ணப்பப் பத்திரங்களை எங்கு ஒப்படைத்தல் வேண்டும்?
புதுப்பித்தல், மாற்றியமைத்தல் மற்றும் காலத்தை நீடித்துக்கொள்ள எவ்வளவு காலம் செல்லும்?
1 மணி நேரம் 30 நிமிடங்கள்

புதுப்பித்தல், மாற்றியமைத்தல் மற்றும் காலத்தை நீடித்துக்கொள்வதற்கான கட்டணம் யாது?
கீழேயுள்ள அட்டவணையில் பார்க்கவும்.

எனது விண்ணப்பப் பத்திரத்தை ஒப்படைப்பது எவ்வாறு?
கடவுச்சீட்டொன்றில் தகவல்களில்/ விபரங்களில் மாற்றங்களைச் செய்வதற்காக சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்பத்திரத்துடன் கீழ்க் காணும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளவாறு தேவையான ஆவணங்களை, அவற்றின் நிழற் பிரதிகளுடன் சமர்ப்பித்தல் வேண்டும்.

கவனிக்க – மூலப்பிரதிகள் சகிதம் நிழற்பிரதிகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
மாற்றுதல் / புதுப்பித்தல்
அவசியமான ஆவணங்கள்
சம்பந்தப்பட்ட கட்டணம்
பெயரை மாற்றுதல். கடவுச்சீட்டுடன் ஏற்புடையவாறு பிறப்புச் சான்றிதழ் அல்லது விவாகச் சான்றிதழ் இலங்கை ரூபா. 1000.00
பிள்ளையின் பெயரை நீக்குதல் கடவுச்சீட்டு இலங்கை ரூபா. 1000.00
தொழிலை உள்ளடக்குதல் தொழிலை நிரூபிக்கின்ற அல்லது தகைமைகளை நிரூபிக்கின்ற ஆவணங்கள் இலங்கை ரூபா. 1000.00
தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்சேர்த்தல் தேசிய அடையாள அட்டை இலங்கை ரூபா. 1000.00
ஒரே வழிப் பயணத்தை செல்லுபடியற்றதாக்கல் தேசிய அடையாள அட்டையும், பிறப்புச் சான்றிதழும் இலங்கை ரூபா. 1000.00
இந்தியா, நேபாளம் ஆகியவற்றை மட்டும் செல்லுபடியற்றதாக்கல் தேசிய அடையாள அட்டையும் பிறப்புச் சான்றிதழும் இலங்கை ரூபா. 1000.00
பிற மாற்றங்களைச் செய்தல்   இலங்கை ரூபா. 1000.00

 

Please inform your complian through  the whatsapp -

  • Join the Whatsapp Group Clike Here
  • Scan the QR Code using the Whatsapp Camera
  • shared qr code